“என் சாவில் இது நடந்தா நல்லா இருக்கும்”.. ஷாருக்கான் அதிர்ச்சி பேச்சு.. அதிர்ந்த ரசிகர்கள்!!..

இந்தியா முழுவதும் அறிமுகமான நபராக விளங்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் படத்தில் நடிப்பதற்காக சுமார் 250 கோடி சம்பளம் பெறுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

நடிகர் ஷாருகான் படத்தில் நடிப்பதோடு நின்று விடாமல் படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் ஷாருகான் அண்மையில் பேசிய பேச்சாளர்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

“என் சாவிலும் இது நடந்தா நல்லா இருக்கும்”..

இதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? பொதுவாக மனிதன் பிறப்பு என்று எடுக்கும் போது அவனுக்கு இறப்பு என்பது கட்டாயமான நிகழ்வாக தான் உள்ளது. எனினும் ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படுகின்ற இறப்பு பற்றி எப்போதும் நினைப்பது இல்லை.

அந்த வகையில் நடிகர் ஷாருகான் அதிகளவு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கக் கூடிய நபர் என்பதோடு மட்டுமல்லாமல் பெண்கள் விரும்பும் நடிகர்களில் ஒருவராக இருப்பதோடு அதிகளவு பெண் ரசிகர்களையும் பெற்றவர்.

இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து சினிமாவின் கிங் காங்காக இருக்கிறார். இவர் ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் செய்யும் படங்களாக தான் அமைந்திருக்கும்.

ஷாருக்கானின் அதிர்ச்சி பேச்சு.. அதிர்ந்த ரசிகர்கள்..

அண்மையில் இவர் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்ததோடு மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி யோகி பாபு உள்ளிட்ட பல நடித்து இந்த படம் வெற்றி அடைந்தது.

மேலும் இந்த படமானது அண்மையில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாஜகவின் சரிவுக்கு காரணமாக இருந்தது என்று சிலர் சொல்லி வருவதை நீங்கள் கேட்டறிந்திருக்கலாம்.

இந்நிலையில் சுவிசர்லாந்தில் நடைபெற்ற 77-வது லோகார்னோ விழாவில் வாழ் நாள் சாதனை வழங்கப்பட்டது. இதை அடுத்து youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில் தான் இறப்பு நேர்வதற்கு முன்பு கூட நடித்தால் நன்றாக இருக்கும். அதாவது சாகும் நாள் வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்று தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தன் உயிர் போகும் போது அது ஷூட்டிங் ஸ்பாட்டில் போக வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கட் சொல்லும் போது தான் அங்கு எழுந்திருக்கவே கூடாது என்று சொன்ன விஷயமானது தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்த விஷயமானது ஷாருக்கான் ரசிகர்களின் மத்தியில் எமோஷனலான உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam