இப்படி கூப்படக்கூடாதுனு மலர் டீச்சரிடம் கெஞ்சிய பிரபல நடிகர்.. அப்படி என்ன ஆச்சு..

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து சாதித்த முன்னணி நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது முக்கியமான முன்னணி நடிகராக இருப்பவர்  நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது கமலஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சாய் பல்லவி சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்திருக்கிறார். மேலும் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு இந்த படம் மக்களுக்கு விருந்தாக வரவுள்ளது.

இப்படி கூப்படக்கூடாதுனு மலர் டீச்சரிடம் கெஞ்சிய பிரபல நடிகர்..

இந்நிலையில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அந்த வகையில் பொதுவாக சிவகார்த்திகேயன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் சூப்பர் ஸ்டாருக்கு பின் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் நடிகர் யார் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் அவரிடம் மைக்கை கொடுத்து விட்டால் போதும் பழைய நினைவுகளில் நீந்த கூடிய அவர் மிகவும் கலகலப்பாக பல விஷயங்களை சொல்லி அனைவரையும் ரசிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைப்பார்.

அப்படித் தான் அமரன் பட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசும் போது பிரேமம் படத்தை பார்த்து விட்டு மலர் டீச்சர் மயக்கத்தில் சாய்பல்லவிக்கு போன் செய்து நீங்க நல்லா நடிச்சு இருக்கீங்க என்று கூறினேன் என்று சொன்னார்.

அப்படி என்ன ஆச்சு..

மேலும் சாய் பல்லவி உடனே தேங்க்யூ அண்ணா என்றால் எனக்கு ஒரே ஷாக் ஆகிவிட்டது. அதனால மட்டும் கூப்பிடாத அந்த படத்தில் வர மாதிரி என்னை மறந்தும் கூட போயிடுனு சொன்னேன் என கலகலப்பாக பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதை அடுத்து மலர் டீச்சர் இடம் அப்படி இனி மேல் கூப்பிடக்கூடாது என கெஞ்சிய பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தானா என இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை தற்போது இணையத்தில் வேகமாக பரப்பி வருகிறார்கள்.

மேலும் தீபாவளிக்கு வெளி வர உள்ள இந்த படத்தை பார்க்க சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். இந்தப் படமும் இவருக்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்து வசூலை வாரித்தரும் என ரசிகர்கள் படத்தைக் காணக்கூடிய ஆவலில் காத்திருக்கிறார்கள்.

எது எப்படியோ தீபாவளியில் சரவெடி போல் இந்த படம் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் என்பதில் அனைவரும் உறுதியாக இருப்பதால் இந்த படம் மாஸ் வெற்றியை தரும் என நம்பலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam