தற்சமயம் தமிழ் சினிமாவில் அனைத்து கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்க கூடிய நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் விஜய் சேதுபதி இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு என்பது குறையாது என்றுதான் கூற வேண்டும்.
கமல் பணத்துக்காக செஞ்ச அந்த விஷயம்
இந்த நிலையில் அடுத்த கட்டமாக விஜய் சேதுபதி தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கமலஹாசன்தான் இவ்வளவு நாட்கள் அதை தொகுத்து வழங்கி வந்தார்.
எனவே அந்த நிகழ்ச்சி துவங்கியது என்றாலே கமல்ஹாசன்தான் அனைவரின் நினைவிருக்கும் வருவார் என்று கூறலாம். அப்படி இருந்த நிலையில் அதனை போக வைத்து விஜய் சேதுபதி அங்கு எப்படி தனக்கான இடத்தை பிடிக்கப் போகிறார் என்பது ஒரு சவாலான விஷயமாக இருந்து வருகிறது.
மறுத்த விஜய் சேதுபதி..!
இந்த நிலையில் விஜய் சேதுபதி தனக்கென சில கருத்துக்களை கொண்டவர் ஆவார் அதிலிருந்து எப்பொழுதுமே விலக மாட்டார். அந்த விஷயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட சில விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள முடியாது என்று கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.
அதாவது விஜய் சேதுபதி சூதாட்டம் மாதிரியான விஷயங்களுக்கு எப்பொழுதுமே ஆதரவாக இருக்க மாட்டார். இந்த நிலையில் தற்சமயம் நடக்கும் பிக் பாஸ் சீசன் 8 ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களில் ஒரு ரம்மி நிறுவனமும் இருந்து வருகிறது.
பிக்பாஸில் இதை கவனிச்சீங்களா
அந்த நிறுவனத்தின் பெயரையும் ஸ்பான்சர்களின் பெயர்களை கூறும் பொழுது கூற வேண்டும். இது சின்ன திரையில் ஒரு அடிப்படை விதிமுறை ஆகும். இதற்கு முன்பு கமல்ஹாசன் இருந்தபோது கூட அவர் இந்த மாதிரியான ஸ்பான்சர்களின் பெயர்களை கூறினார்.
ஆனால் விஜய் சேதுபதி அதற்கு ஒப்புக்கொள்ளவே முடியாது என்று கூறிவிட்டார். அது ஒரு தவறான முன்மாதிரியாகிவிடும் என்பதால் அந்த நிறுவனத்தின் பெயரை என் வாயால் சொல்ல முடியாது என்று விஜய் சேதுபதி கூறிவிட்டாராம். இதனால் முக்கியமான ஒரே ஒரு ஸ்பான்சர் பெயரை மட்டும்தான் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் கூறுவார் வேறு எந்த ஸ்பான்சர் பெயரையுமே அவர் கூற மாட்டார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவனித்தால் இந்த விஷயத்தில் இந்த விஷயம் தெரியும்.