பிக் பாஸ் எட்டாவது சீசன் நிகழ்ச்சியில் ஒரு கடையில் செயின் திருடியதை ஒப்புக்கொண்டிருக்கிறார் போட்டியாளர் சாச்சனா.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்திருந்தார் சாச்சனா. இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட முதல் நாளே இவர் வெளியேற்றப்பட்டார் ரசிகர்கள் பலரும் இவரை நினைத்து வருத்தப்பட்டார்கள். வந்த முதல் நாளிலேயே எப்படி ஒரு போட்டியாளரை வெளியேற்றலாம். இதற்கு அவரை அழைக்காமலேயே இருந்திருக்கலாமே என்றெல்லாம் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் இறுதியில் மீண்டும் போட்டியாளராக சேர்க்கப்பட்டார். போட்டியில் சேர்ந்தது முதல் மெச்சூரிட்டி இல்லாத தன்னுடைய அணுகுமுறையை போட்டியாளர்களிடம் இவர் வெளிப்படுத்துகிறார் என்பதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் சிறு வயதில் செயின் ஒன்றை திருடியதை வெளிப்படையாக பிக் பாஸ் வீட்டில் ஒப்புக் கொண்டிருக்கிறார் சாச்சனா.
முன்னதாக தன்னுடைய கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பேருந்துகளில் செய்த அட்டகாசத்தை தன்னுடைய நினைவுகளாக பகிர்ந்திருந்தார் பிக் பாஸ் போட்டியாளர் சரவணன்.
இதனைக் கேட்ட பிக்பாஸ் அடுத்த நாளே நீங்கள் செய்தது குற்றம் தவறான விஷயம் எனக்கூறி அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.
இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அவர் என்றோ ஒரு காலத்தில் விவரம் தெரியாத வயதில் செய்த விஷயத்தை பதிவு செய்திருக்கிறார். அதனை காரணமாக கொண்டு இவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமா..? என்று சரவணனுக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியாகின.
அதே சமயம் பிக் பாஸ் எடுத்த முடிவு சரிதான் என்று வரவேற்ப்பும் இருந்தது. இந்நிலையில், சாச்சனா ஒரு தவறை செய்திருக்கிறார். இதற்கு பிக்பாஸ் என்ன முடிவு எடுக்கப்போகிறார்..? ஆண் போட்டியாளர்கள் என்றால் மட்டும் ஈசியாக வெளியே அனுப்பி விடுவீர்களா..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி சர்ச்சையாக வெடித்து இருக்கின்றது.