நேற்று பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டவராக அர்னவ் இருந்து வருகிறார். அர்னவ் சீரியலில் நடித்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆவார். அதனை தொடர்ந்து பல வருடங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று போராடி வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் எட்டில் அவருக்கு பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாகவே அர்னவ் பெரிதாக எதுவும் விளையாடாமல் தான் இருந்து வந்தார்.
வச்சேன் பாரு உனக்கு ஆப்பு
பெரும்பாலும் மக்கள் மத்தியில் இடத்தை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து போட்டியில் நிலைத்திருப்பது கடினம்தான். அப்படித்தான் அர்னவும் போட்டியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டார். அது மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் இவரை குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
இவருடைய முன்னாள் மனைவி திவ்யா ஸ்ரீதர் தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. திவ்யா ஸ்ரீதர் அர்னவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக 2020 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
எலிமினேட்டை கொண்டாடிய மனைவி
இது குறித்து பேட்டியில் பேசிய அருனவின் முன்னாள் மனைவி திவ்யா ஸ்ரீதர் கூறும் பொழுது திருமணத்திற்கு பிறகு என்னை மிகவும் கொடுமைப்படுத்தினார். அவருக்கும் சீரியல் நடிகை அன்சிதாவிற்கும் இடையே காதல் இருந்து வந்தது.
நான் வீட்டில் இருக்கும் சமயங்களிலேயே அவர்கள் அறைகளுக்குள் சென்று கதவை சாத்திக்கொள்வார்கள். அதேபோல நான் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் அவர்கள் இருவரும் என்னை நிறைய தொந்தரவு செய்திருக்கிறார்கள் என்று பல முக்கிய விஷயங்களை பேட்டியில் பேசியிருந்தார் திவ்யா ஸ்ரீதர்.
அவங்கதான் காரணமாம்
எலிமினேஷனுக்கான நாமினேஷனில் இதனால் குறைந்த ஓட்டுகளையே வாங்கினார் அர்னவ். அதனால் இப்பொழுது போட்டியில் இருந்து அவர் விலக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இதை கொண்டாடும் வகையில் நேற்று நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் திவ்யா ஸ்ரீதர் ரசிகர்கள் பலரும் திவ்யா ஸ்ரீதருக்கு ஆதரவாக பேசி வருவதையும் பார்க்க முடிகிறது.