சூப்பர் ஸ்டார் என்று யார் என்று கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இன்று வரை தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக நின்று நிலைத்திருக்கும் ரஜினிகாந்த் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ரஜினியின் மாஸான ஸ்டைலுக்கு மயங்காத நபர்களை இல்லை என்று சொல்லக்கூடிய அளவு திரைய வட்டாரத்தில் அதிகளவு ரசிகர்களை பெற்றிருப்பது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழும் இவர் பற்றி பழம் பெரும் நடிகை ஒருவர் சொன்ன விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது.
சொல்லவே நா கூசுது..
அந்தப் பழம் பெரும் நடிகை கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர். 1965 இல் வெளி வந்த வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானதை அடுத்து 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மலையாளத் திரை உலகில் இவரை உஷா குமாரி என்று அழைத்திருந்தாலும் தமிழ் திரையுலகை பொருத்த வரை இவரது பெயர் வெண்ணிறாடை நிர்மலா என்று சொன்னால் அனைவருக்கும் பளிச் சென்று தெரிந்து விடும்.
அந்தப் பழம் பெரும் நடிகை தான் ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட் இல் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொல்லும் போது சொல்லவே நா கூசுகிறது என்னை பார்த்து எப்படி இப்படி சொன்னார் என்று இன்று நிலைத்து பார்த்தாலும் தெரியவில்லை என்று அண்மை பேட்டியில் பேசி இருக்கிறார்.
ரஜினி என்ன பாத்து இப்படி கேட்பாருன்னு நினைக்கல..
இவர் ரஜினிகாந்த் ஒரு அருணாச்சலம் படத்தில் நடித்திருக்கிறார். அதுவும் மாமியார் வேடம் ஏற்று நடித்த சமயத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விஷயத்தை தான் தற்போது ரசிகர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாகவே ரஜினி என்றால் எப்போதும் மாஸ் ஸ்டைல் என்பதில் அனைவருக்கும் தெரியும். அது போல ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் கல கலவென்று இருப்பதால் அனைவரும் இவரை விரும்புவார்கள்.
மேலும் அவரோடு இணைந்து வேலை செய்யும் போது அவர் ஒரு மிகச்சிறந்த நண்பர் போல் செயல்படுவார். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மேலும் செட்டுக்குள் உள்ளே வந்து என்னை பார்த்த உடனேயே கலாட்டா செய்ய ஆரம்பித்து விடக்கூடிய நபர் என்று கூறினார்.
மேலும் அதை எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை என்னை பார்த்தவுடன் என்னை பார்க்கும் போது மாமியார் போல் தெரியவில்லை என்று சிரித்தபடியே கூறுவார் என்று இவரும் வெட்கத்தோடு சிரித்தபடியே கூறினார்.
பழம் பெரும் நடிகை ஓபன் டாக்..
மேலும் இந்த வயதில் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என்று சொல்லி கலாட்டா செய்வார். அதுமட்டுமல்லாமல் இவ்வளவு வருஷமாக உங்கள் அழகை பார்த்து யாரும் கல்யாணம் செய்து கொள்ளாமல் எப்படி விட்டு வைத்தார்கள் என்று கேட்டிருக்கிறார்.
இந்த கேள்வியை தென்னிந்திய மொழியில் இருக்கும் அனைத்து ரசிகர்களும் கேட்க நினைத்து இருப்பார்கள். அதை ரஜினியே கேட்டுவிட்டார் போல என தொகுப்பாளர் அவரிடம் கேட்க சிரித்தபடியே தலை ஆட்டிய வெண்ணிறாடை நிர்மலா அவர் மிகவும் ஜாலியான டைப் என்பதோடு மட்டுமல்லாமல் இது போல கிண்டல் செய்யக்கூடிய நபராக இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்.
இதை அடுத்து ரஜினிகாந்த் இவ்வளவு வயதாகியும் வெண்ணிறாடை நிர்மலாவை இன்னும் இளமையாக இருக்கிறீர்கள் என்று சொல்லி அதோடு மட்டுமல்லாமல் கல்யாணம் செய்யாமல் எப்படி விட்டு விட்டார்கள் என்று கேட்ட கேள்வியை பற்றி இணையம் முழுவதும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இதை அடுத்து ரஜினிகாந்த் வெண்ணிறாடை நிர்மலாவிடம் நடந்து கொண்டதை பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதால் இருந்த விஷயம் இணையம் எங்கும் வேகமாக பரவி ரஜினியின் புகழ் பாடி வருகிறது.