சினிமாவை பொறுத்தவரை பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைப்பது என்பது ஒவ்வொரு நடிகைக்கும் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது.
ஏனெனில் பல சின்ன திரைப்படங்களில் நடித்தாலும் கூட அவர்களுக்கு கிடைக்காத ஒரு அங்கீகாரம் என்பது ஒரு பெரிய திரைப்படத்தில் நடிக்கும் போது கிடைத்து விடுகிறது. இதனால் நடிகர்கள் நடிகைகள் பெரும்பாலும் பெரிய இயக்குனர்கள் திரைப்படங்கள் என்றாலே கதையை கூட கேட்க மாட்டார்கள்.
அந்த காட்சியை பண்ண வச்சாங்க
அதில் நடிக்க ஒப்புக்கொள்வார்கள். அப்படி தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாகவே நடிகையாக இருந்து வந்தவர்தான் நடிகை கனிகா. திவ்யா என்கிற இயற்பெயர் கொண்ட கனிகா சினிமாவிற்கு வந்த பிறகு அவரது பெயரை மாற்றிக் கொண்டார்.
மதுரையை சேர்ந்த இவர் 2002ல் இருந்து தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்து வருகிறார். நிறைய திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதை பார்க்க முடியும். வரலாறு திரைப்படத்தில் கூட அஜித்துக்கு அம்மா கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்திருப்பார்.
வெறுத்து போன நடிகை
இப்படி நிறைய திரைப்படங்களில் கனிகா நடித்திருக்கிறார். சமீபத்தில் எதிர்நீச்சல் என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் இன்னமும் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார். அவர் ஒரு சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகை என்று எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் அதை தாண்டி அவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார். நிறைய திரைப்படங்களுக்கு டப்பிங் வேலைகளை இவர் செய்திருக்கிறார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவிற்கு குரல் கொடுத்தது நடிகை கனிகாதான் அதேபோல அந்நியன் திரைப்படத்தில் சதாவிற்கும் இவர்தான் குரல் கொடுத்திருந்தார்.
சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயா சரணுக்கும் கனிகா தான் குரல் கொடுத்திருந்தார். இவரது குரல் தனித்துவமாகவும் மிகவும் அழகாகவும் இருப்பதால் இயக்குனர் ஷங்கர் அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களிலும் கனிகாவை பேச வைத்தார்.
பெரிய நடிகைனா இப்படி செஞ்சிருப்பீங்களா?
இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் நடந்த அனுபவம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டிகள் பேசி இருக்கிறார் கனிகா. அதில் கனிகா கூறும்பொழுது அந்நியன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் பீரங்கி பேரத்தில் கூட ஊழல் நடக்குது என்பதுதான் அந்த வசனம்.
அது சதா கூறுவது போல இருக்கும் அதுவும் மிக வேகமாக அதை கூறி இருப்பார் சதா. அதை டப்பிங்கில் பேசும்போது கனிகாவால் அதை சரியாக பேசவே முடியவில்லை. கிட்டத்தட்ட 50, 60 முறை முயற்சி செய்தும் அவருக்கு பேச வரவில்லை.
அவருக்கு அனுப்பிவிட்டு மறுநாள் அழைத்து வந்து திரும்ப பேச வைத்திருக்கின்றனர் அப்பொழுதும் கூட அவருக்கு வரவே இல்லை இதனை பேட்டியில் கூறிய கனிகா டப்பிங் அனுபவத்திலேயே என்னால் பேச முடியாமல் போன ஒரு வசனம் என்றால் அது அந்த வசனம்தான் என்று கூறியிருக்கிறார்.