கமலுக்கும் ராணுவத்துக்கும் அந்த படத்தால் தொடர்புண்டு.. காஷ்மீரில் நடந்த சம்பவம்.. அதிர்ச்சியடைந்த இயக்குனர்..!

தமிழில் பல திறமைகளை கொண்ட ஒரு சில திரை பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். சிறுவயதில் நடிப்பின் மீது மட்டும் ஆர்வம் கொண்டு நடித்து வந்த கமல்ஹாசன் போக போக பல துறைகளிலும் பணிபுரிய துவங்கினார்.

சிறிது நாட்கள் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார் கமல்ஹாசன். அதேபோல இசை அமைப்பது பாடல்கள் பாடுவது திரைக்கதை எழுதுவது திரைப்படங்களை இயக்குவது என்று சினிமாவில் இருக்கும் பல துறைகளில் இவர் பணிபுரிந்து இருக்கிறார்.

அதேபோல தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்பது கமலஹாசனின் நெடுநாளைய ஆசையாக இருந்தது. அதேபோல நிறைய மாற்று சினிமாக்களையும் தமிழ் சினிமாவிற்கு அவர் கொண்டு வந்து இருக்கிறார்.

கமலுக்கும் ராணுவத்துக்கும் அந்த படத்தால் தொடர்புண்டு

தற்சமயம் தயாரிப்பாளராக மாறி இருக்கும் கமல்ஹாசன் நிறைய படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அமரன். முகுந்த் வரதராஜன் என்கிற நிஜ ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை இயக்குவதற்காக பட குழு அதிகமான கஷ்டங்களை சந்தித்து இருக்கிறது. படத்தின் கதைகளங்கள் பலவும் ராணுவ தளங்களில் நடப்பது போல இருப்பதால் இந்திய ராணுவத்திடம் அனுமதி பெற்று பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கின்றனர்.

காஷ்மீரில் நடந்த சம்பவம்

ஆனால் இந்திய ராணுவத்திடமே அனுமதி பெற்றாலும் கூட அவ்வளவு எளிதில் ராணுவ முகாம்களுக்கு சென்று படப்பிடிப்பை நடத்த முடியாது ஆனால் கமல்ஹாசன் ஆனால் அது சாத்தியப்பட்டதாக இயக்குனர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஏனெனில் கமல்ஹாசன் ஆளவந்தான் திரைப்படத்தில் நடிக்கும் போது அதில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார். உண்மையிலேயே ராணுவ அதிகாரிக்கு தெரியும் விஷயங்கள் எல்லாம் தனக்கு தெரிய வேண்டும் என்று கூறி ராணுவ பயிற்சி பள்ளியில் சேர்ந்து சில நாட்கள் இராணுவத்தில் பயிற்சி பெற்றிருக்கிறார் கமல்ஹாசன்.

இதன் மூலமாக ராணுவத்தில் இருந்த பலருடனும் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது அதனை பயன்படுத்திதான் அமரன் படத்திற்கான படப்பிடிப்புகளை எளிதாக முடித்து இருக்கின்றனர் இந்த விஷயத்தை ராஜ்குமார் பெரியசாமி அந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam