prabhaharan

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? உடைந்த 15 வருட பகீர் ரகசியம்.. உண்மையை உலகிற்கு சொன்ன அண்ணன் குடும்பம்..

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். இவர் 1972 ஆம் ஆண்டு புதிய தமிழ் புலிகள் என்ற அமைப்பை தனது 18 வயதில் துவங்கினார்.

prabhaharan

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் இலங்கை அரசின் மேல் கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்ததை அடுத்து மேல் படிப்பை தொடர முடியாமல் போனது.

பிரபாகரனின் குடும்பம்..

தமிழ் ஈழப் போராளியான பிரபாகரன் 1984 இல் மதிவதனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டா.ர் இவருக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் இருந்தார்கள். இவரது மகள் பெயர் துவாரகா மகனின் பெயர் பாலச்சந்தர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இந்நிலையில் இலங்கை அரசுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையே நடந்த போரில் போராளி பிரபாகரன் அவரது மனைவி, மகள் மற்றும் மகன் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற விஷயம் காட்டு தீ போல் பரவியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

எனினும் இதைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நடந்த போரின் காரணமாக இலங்கை அரசால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட இவர்கள் அனைவரும் உயிரோடு இருப்பதாக விஷயங்கள் எப்போதும் கசிந்து வந்தது.

prabhaharan

இந்நிலையில் பிரபாகரனின் மனைவி மதிவதனியை சில ஆண்டுகளுக்கு முன்பு தனது உயிரோடு பார்த்ததாகவும் அவர்களை சந்தித்து உரையாடி வருவதாகவும் அவர்களோடு உணவருந்திய செய்தியை கூறி அவரது சகோதரி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? உடைந்த 15 வருட பகீர் ரகசியம்..

இதனை அடுத்து இந்தியாவின் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்து இருக்கும். இவரது இறுதி நாட்கள் என்ன ஆனது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

அது போல பிரபாகரனின் இறுதி நிமிடங்களில் ஒளிந்திருக்கும் மர்ம முடிச்சு பற்றி இன்னும் வெளிவரவில்லை என்று பலரும் நினைத்த வண்ணம் இருக்கிறார்கள்.

இது குறித்த வேறுபட்ட சிந்தனைகள் கருத்துக்கள் சர்ச்சைகள் என பல்வேறு நாடுகளில் இவரை பற்றிய பேச்சுக்கள் இன்னும் பேசப்பட்டு வரும் நிலையில் தந்தி டிவிக்கு பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்ற விஷயத்தை 15 ஆண்டு காலம் கழித்து அவரது அண்ணன் மகன் கொடுத்த பேட்டியின் மூலம் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

prabhaharan

அந்தப் பேட்டியில் நெறியாளரின் கேள்விகளுக்கு தக்க முறையில் பதில் அளித்து இருக்கக்கூடிய அவரது அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் மற்றும் அவரது மகன் அளித்த பேட்டியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவரின் மகன் கார்த்திக் மனோகரன் அதாவது பிரபாகரனின் அண்ணன் மகன் அண்மை பேட்டியில் பகிர்ந்து இருக்கும் விஷயமானது பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தார் பற்றிய மர்ம முடிச்சுகளை அவிழ்த்து விடும் சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஈழத் தமிழ் அமைப்பினருக்கு வீரவணக்கம் செலுத்தக்கூடிய மரபு இல்லாத சமயத்தில் நீங்கள் எப்படி உங்கள் சித்தப்பா மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தோருக்கு வீரவணக்கம் செலுத்தக்கூடிய நிகழ்வை முன்னெடுத்தீர்கள் அப்படி என்றால் அவர்கள் இறந்து விட்டார்களா? என்ற கேள்வி வைக்கப்பட்டது.

உண்மையை உலகிற்கு சொன்ன பிரபாகரன் அண்ணன் குடும்பம்..

இதற்கு பதில் அளித்து பேசிய கார்த்திக் மனோகரன் அவருக்கு உரிய இறுதி மரியாதை கொடுப்பது நல்லது என்று நினைத்தத காரணத்தால் அதற்கான முன் எடுப்புக்களை நானும் எனது தந்தையும் செய்தோம் என்று கூறினார். மேலும் அவரது இறப்பை பற்றி மறைக்க நினைத்தவர்களின் மத்தியில் இது கட்டாயம் என்பதை உணர்ந்ததால் தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் எதை செய்ய முடிவு செய்தோம்.

மேலும் ஆரம்ப கட்டத்தில் ஏன் செய்யவில்லை என்றால் சூழ்நிலைகள் அப்போது எங்களுக்கு சாதகமாக இல்லை. எனினும் எனது அப்பாவின் மனதில் இது ஒரு நெருடலாகவே இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் எனது சித்தி எனது தங்கை மற்றும் சித்தப்பா சித்தப்பாவின் உடன் இருந்த சார்லஸ் போன்றவர்கள் வீர மரணம் தழுவிய விஷயம் உறுதியானது. மேலும் இதை எனது பாட்டி பார்வதி அம்மாள் மூலம் அறிந்து கொண்டோம்.

அந்த சமயத்தில் எனது பாட்டி யாருமே இல்லை எல்லோரும் இறந்து விட்டார்கள் என்று உறுதிப்படுத்தினார். மேலும் அந்த இயக்கத்தைச் சார்ந்த யாருமே அறிவிக்காத சமயத்தில் நீங்கள் இதை அறிவித்து வீரவணக்கம் செலுத்துவதின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் வைக்கப்பட்டது.

இலங்கை ராணுவம் கூட உங்களது சித்தி மதிவதனி மற்றும் சகோதரி துவாரகா பற்றிய நிலைகளை கூறாத சமயத்தில் அவர்கள் ஒருவேளை தப்பி சென்றிருக்கலாம் என்ற கூற்று முன் வைக்கப்பட்ட நிலையில் நீங்கள் எப்படி இதை செய்ய முன் வந்தீர்கள்.

இதற்கு அவர் பதில் சொல்லும் போது பாலச்சந்தர் தனித்து விடப்பட்டதே சித்தி இறந்து போன பின்பு தான் நடந்திருக்கும் உயிரோடு இருந்திருந்தால் பாலச்சந்தரை அப்படி விட்டிருக்க மாட்டார்கள்.

இதில் முதலாவதாக களமுனையில் மரணத்தை தழுவிக் கொண்டது எனது சகோதரி துவாரகா. அதுவும் ஆயுதக் கிடங்கு இருந்த பகுதியில் எந்த சம்பவம் நடந்திருக்க வேண்டும். எனவே ஆயுத கிடங்கில் பயிற்சிகளை மேற்கொண்டு இருந்த சமயத்தில் விமானங்கள் குண்டு மழை பொழிந்த போது இந்த வீர மரணம் ஏற்பட்டுள்ளதை அவரோடு பயிற்சி எடுத்த ஒருவர் கூறியதாக சொல்லி இருக்கிறார்.

இதற்கு ஆதாரமாக புகைப்படங்களும் வெளிவந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கர்ணல் சங்கரின் மனைவி குக ஆன்ட்டி தான் எங்களது சித்தி மற்றும் பாலச்சந்தரை மிக நல்ல முறையில் பார்த்துக் கொண்டவர்.

prabhaharan

இதைத்தொடர்ந்து தான் எனது சித்தி இருந்ததை அடுத்து பாலச்சந்தரை எப்படி கொன்றார்கள் என்பதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் எனது சித்தப்பாவும் தான் சிக்கிவிட்டால் விபரீதங்கள் ஏற்படும் எனவே தன் உடல் மட்டும்தான் இலங்கை ராணுவத்திற்கு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அவர் நினைத்திருந்தால் மனித வெடிகுண்டாக மாறி இலங்கையை முற்றிலும் அடித்து இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம் எனினும் இந்த போராட்டம் ஏதாவது ஒரு இடத்தில் முற்றுப் பெற வேண்டும் இல்லை என்றால் அது தொடர்ந்து நடக்கும் என்பதை உணர்ந்துதான் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.

ஒருவேளை அவர் உயிரோடு பிடிக்கப்பட்டு இருந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். எனவேதான் எப்படியும் இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கி விடக்கூடாது என்பதில் சித்தப்பா உறுதியாக இருந்து இப்படி செய்து கொண்டார்.

இதனை அடுத்து இதை தற் கொடை என்றுதான் சொல்ல வேண்டும் என உறுதிப்பட கார்த்திக் கூறியிருக்கிறார். மேலும் இதை வெளிப்படையாக இப்போது சொல்ல காரணம் இன்னும் அவர் உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு பலரிடம் தவறுதலாக பணத்தை வசூல் செய்வது எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை தேடி தருவது போல் இருக்கிறது.

எனவேதான் இனியும் இதை மூடி மறைத்தால் சரி வராது என்று வெளிப்படையாக இன்று கூறுகிறேன் என 15 வருட ரகசியத்தை உடைத்து பிரபாகரன் உயிரோடு இல்லை என்ற விஷயத்தை இந்த உலகிற்கு கூறி இருக்கிறார்.

--- Advertisement ---

Check Also

ப்பா.. சுண்டி இழுக்கும் அழகு சைட் போஸில் நச் போஸ்..! கிக்கு ஏற்றும் வேதிகா.. அட.. ஒரு வாரம் தாங்கும்!!..

தென்னிந்திய திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை வேதிகா 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த மதராசி என்ற திரைப்படத்தின் …