சினிமாவைப் பொறுத்தவரை அதில் வரும் கதைகள் எல்லாமே எங்கோ ஒரு இடத்தில் இயக்குனருக்கு உருவான கதையாகதான் இருக்கும். வெளியில் இருந்து எதுவும் பெரிதாக கதைகள் உருவாகி விடுவது கிடையாது. சொல்லப்போனால் நாம் பார்க்கும் பல திரைப்படங்களின் கதைகள் ஒரு சின்ன புள்ளியிலிருந்துதான் துவங்கி இருக்கும்.
ஒரு வரியில்தான் முதலில் ஒரு கதையை இயக்குனர்கள் எழுதுவார்கள் அப்படியாகதான் லோகேஷ் கனகராஜ்க்கு மாஸ்டர் திரைப்படத்தின் கதை உருவானது. இந்த விஷயத்தை லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
மாஸ்டர்ல வர்ற ஜே.டி ப்ரஃபசர்
லோகேஷ் கனகராஜ் தமிழின் மிக முக்கியமான இயக்குனர் ஆவார். அவர் இயக்கும் படங்கள் என்றாலே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் இருந்து வருகிறது. இதனை அடுத்து தொடர்ந்து பெரிய ஹீரோக்களை வைத்து திரைப்படங்களை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
தற்சமயம் கூட நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். கூலி திரைப்படம் எப்படியும் தமிழக வசூல் சாதனையில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் என்றாலே பயங்கரமான ஆக்ஷன் திரைப்படமாக தான் அது இருக்கும் என்பது பலரும் அறிந்த விஷயம்.
நெஜமாவே இருக்கார்
அப்படி இருக்கும் பொழுது அதில் ரஜினிகாந்த்தும் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் உருவான கதையை அவர் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது எனது அப்பா நோட்டு புத்தகங்கள் விற்கும் கடை ஒன்று வைத்திருக்கிறார். அந்த கடையில் நான் ஒரு முறை நின்று கொண்டிருந்தபோது கட்டம் போட்ட சட்டை போட்டுக்கொண்டு ஒரு நபர் வந்து எனது தந்தையிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அதிர்ச்சி கொடுத்த லோகேஷ்
பிறகு அவர் சென்று விட்டார். அவர் செல்லும் பொழுது அவர் மீது மது வாடை அடித்தது. பொதுவாக யார் மது அருந்தி இருந்தாலும் அவர்களை கடை பக்கமே எனது தந்தை அனுமதிக்க மாட்டார். அப்படி இருந்தும் கூட எப்படி இந்த நபருடன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தான் என்று எனது தந்தையிடம் போய் கேட்டேன்.
அப்பொழுது எனது தந்தை அவர் கல்லூரியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் என்று கூறினார். அந்த கதாபாத்திரத்தை எடுத்து தான் ஜேடி என்கிற விஜய்யின் கதாபாத்திரத்தை உருவாக்கினேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.