வன்மம் தீர்க்க வேண்டிய நேரம் வந்துடுச்சு… கேம் சேஞ்சராக மாறிய டாஸ்க்… கழுவும் ரசிகர்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதன் மீதான ஆர்வம் என்பது ரசிகர்களுக்கு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் அடுத்த கட்டமாக ஒவ்வொரு முறையும் ரசிகர்களை ஊக்கப்படுத்துவதற்காக போட்டிகளை நடத்துவது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

இப்படியாக நடத்தப்படும் போட்டிகள்தான் போட்டியாளர்களுக்கு நடுவில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அவர்களுக்குள் போட்டி, பொறாமை போன்ற விஷயங்கள் உருவாகும். பிறகு அதுவே பிக் பாஸ் நிகழ்ச்சியை மிகவும் சுறுசுறுப்பாக கொண்டு செல்லும்.

வன்ம்ம் தீர்க்க வேண்டிய நேரம் வந்துடுச்சு

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பொழுது ஆண்கள் தனி அணியாகவும் பெண்கள் தனி அணியாகவும் போட்டி போட வேண்டும் என்பது ஒரு விதிமுறையாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்கள் அணி ஆண்கள் அணி அளவிற்கு சிறப்பாக விளையாடாமல் இருந்து வருகின்றனர்.

வன்மம் தீர்க்க வேண்டிய நேரம் வந்துடுச்சு... கேம் சேஞ்சராக மாறிய டாஸ்க்... கழுவும் ரசிகர்கள்.!

முதல் வாரத்தில் இருந்தே ஆண்கள் அணியினர்தான் மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்து வருகின்றனர். அதற்கு தகுந்தார் போல இந்த முறை பெண்கள் அணியினருக்கு ஒரு கடினமான டாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது.

கேம் சேஞ்சராக மாறிய டாஸ்க்

அதாவது பெண்கள் அணியினர் ஒரு ஹோட்டல் நடத்த வேண்டும் ஒரு உணவகத்தை நடத்த வேண்டும். அந்த உணவகத்திற்கு சாப்பிட வரும் கஸ்டமர்களாக ஆண்கள் வருவார்கள். அவர்கள் மனம் நோகாமல் இவர்கள் ஆண்களை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த முறை கொடுத்திருக்கும் டாஸ்க்காக இருக்கிறது.

வன்மம் தீர்க்க வேண்டிய நேரம் வந்துடுச்சு... கேம் சேஞ்சராக மாறிய டாஸ்க்... கழுவும் ரசிகர்கள்.!

சும்மாவே பெண்களை வைத்து செய்கிறார்கள் ஆண் அணியினர் இந்த நிலையில் அவர்களுக்கு கையில் ஒரு ஆயுதத்தை கொடுத்தது போல இந்த முறை டாஸ்க் அமைந்துவிட்டது. ஆனால் பெண்கள் அணியினர் இதற்காக அவர்களிடம் சத்தம் கூட போட முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் அவர்களும் விளையாண்டு வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam