தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜயின் கோட் திரைப்படம் அண்மையில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது உங்கள் நினைவில் இருக்கலாம்.
இதனை அடுத்ததாக தளபதி 69 படப்பிடிப்பில் மும்மரமாக பணியாற்றி வரும் தளபதி இந்த படத்தோடு சினிமா உலகிற்கு பை, பை சொல்லிவிட்டு முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்க இருப்பதாக செய்திகள் வெளி வந்தது தெரிந்திருக்கும்.
விஜய் என்கிட்ட அடம்பிடிச்சு கேட்ட ஒரே விஷயம் இது தான்..
அந்த வகையில் தளபதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கட்சிக்குரிய கொடி மற்றும் கொடி பாடலை அறிமுகம் செய்து வைத்ததோடு மட்டுமல்லாமல் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் படு வேகமாக நடத்தி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் களம் குதிக்க இருக்கிறார்.
இதை அடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததோடு மட்டுமல்லாமல் கட்சியின் முதல் மாநாடு இந்த அக்டோபர் மாதம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்ததோடு அதற்கான முன்னெடுப்பு பணிகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த மாநாட்டில் பிரபலங்கள் பல கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக சொல்லி வரக்கூடிய வேளயில் அதற்கு உரிய வேலைகள் தீவிர படுத்தப்பட்டு வருவதோடு பலரும் மாநாட்டுக்கு வந்து செல்லவும் அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அனைத்து விதமான வேலைகளும் சுறுசுறுப்பாக நடந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கலாட்டா மீடியாவிற்கு விஜயின் தந்தை அளித்த பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வியில் விஜய் அடம் பிடிக்கிற ஒரே விஷயம் என்ன என்பதை மிகச் சிறப்பாக கூறியிருந்தார்.
அதில் விஜய் தன்னிடம் அடம் பிடித்து கேட்ட ஒரே விஷயம் கார் என்ற விஷயத்தை ஓபன் ஆக போட்டு உடைத்து இருக்கிறார். மேலும் அன்றெல்லாம் ஹிந்துவில் கார் லாஞ்சிங் விஷயமானது மிகப்பெரிய அளவில் விளம்பரமாக வெளி வந்ததை கூறினார்.
மேலும் அன்று இம்போர்ட்டட் கார் இல்லாத சூழ்நிலையில் டாட்டாவின் கார் விளம்பரங்கள் பலவும் ஹிந்து நாளிதழில் வெளி வருவதை சுட்டிக்காட்டிய அவர் இந்த வருடம் எந்த தேதியில் புதிய கார் வெளி வரும் என்ற விஷயத்தை பார்த்த உடனே தனக்கு அந்த கார் வேண்டும் என அடம் பிடிப்பார் எனக் கூறியிருக்கிறார்.
SAC எமோஷனல்..
இதில் அந்த விளம்பரத்தை பார்த்த உடனே முதலாவதாக உடையார் அந்த காரை வாங்குவார். இவர் வேறு யாரும் இல்லை ராமச்சந்திரா மிஷனரியின் நிறுவனர் தான். இவரை அடுத்து இரண்டாவதாக காரினை நான் வாங்குவேன் என்று பெருமையாக ஓப்பனாக கூறியிருக்கிறார்.
மேலும் ஒரு பேட்டியில் விஜயின் அம்மா சொல்லி இருப்பார்கள் விஜய் சார் கார் ஓட்ட ரொம்ப ஆசைப்படுவார். ஆனால் அவர் அப்பா அதை தடுத்து விடுவார் என்று கூறி இருக்கிறார். மேலும் சேப்ட்டியாக டிரைவர் ஓட்டித்தான் செல்ல வேண்டும் என்று நீங்கள் சொல்லுவதாக சொல்லி இருக்கிறார்.
எனினும் டிரைவர் போட்டு காரை ஓட்டி சென்றாலும் டிரைவர் சிறிது தூரம் ஓட்டிய பிறகு விஜய் சார் அவரிடம் வாங்கி டிரைவ் செய்வார் என்று சொல்லி இருக்கிறார் என்று சொல்ல அது இன்று வரை தொடர் கதையாக தான் உள்ளது என்று சிரித்தபடி கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆட்டியது.
அதுவும் நெடுந்தூர பயணம் என்றால் கட்டாயம் விஜய் அதை செய்வார் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் விஜய் தன்னிடம் அடம் பிடிக்கிற ஒரே விஷயம் கார் பற்றிய விஷயம் தான் என்று சொன்னதை ரசிகர்களின் மத்தியில் விஜய்க்கு காரின் மீது எந்த அளவு கிரேஸ் உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.