பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமானவர் NSK ரம்யா. தற்போது இவருடைய கணவர் சத்யா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த பேட்டியில் தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதன்படி உங்கள் இருவரில் யாருக்கு அதிகமாக கோபம் வரும் யார்..? முதலில் சமாதானம் ஆகுவார்கள்..? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த NSK ரம்யா என்னைவிட இவருக்கு தான் அதிகமாக கோபம் வரும். இவருக்கு கோபம் வந்தால் ரொம்ப மோசமாக நடந்து கொள்வார். அடக்கவே முடியாது.
அதேபோல முதலில் சமாதானம் ஆவதும் அவர்தான் என பதிவு செய்திருக்கிறார் NSK ரம்யா. இவர்களுடைய இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், மறுபக்கம் பிக்பாஸ் சத்யாவின் மனைவி NSK ரம்யாவா..? என்று ஆச்சரியத்துடன் கேள்வி வைப்பது தான் நெட்டிசன்கள்.