இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேட் ஆகும் போட்டியாளர்கள்.. இந்த பெண் போட்டியாளரா?

பிக்பாஸ் சீசன் 8 தமிழில் துவங்கி 3 வாரங்கள் நிறைவடைந்துவிட்டன. முன்பை விடவும் இப்போது இதில் போட்டிகள் சூடுப்பிடித்துள்ளன. ஆரம்பத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் மிகவும் சாதாரணமாகதான் அதில் வரும் போட்டிகளை கையாண்டு வந்தனர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் போட்டியாளர்கள் போட்டியை அறிந்து விளையாட துவங்கிவிட்டனர். தொடர்ந்து விஜய் சேதுபதியிடம் வாரா வாரம் பேச்சு வாங்க வேண்டும் என்பதுதான் இப்போது பிக்பாஸ் போட்டியாளர்களின் பயமாக இருக்கிறது.

எலிமினேட் ஆகும் போட்டியாளர்கள்

ஏனெனில் ஒவ்வொரு போட்டியாளர்களின் தவறுகளையும் விஜய் சேதுபதி மிக உன்னிப்பாக பார்த்து வருகிறார். அதனை தொடர்ந்து வார இறுதியில் சரியாக அவர்களை லாக் செய்து வருகிறார். இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கிய போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி வந்தனர்.

அதில் முதல் வாரத்திலேயே ரவீந்தர் போட்டியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவானது. அடுத்த வாரத்தில் அர்னவ் போட்டியில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் இந்த வாரம் யார் போட்டியில் இருந்து வெளியேறுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த பெண் போட்டியாளரா

நாமினேஷனை பொறுத்தவரை இந்த வாரம் அன்ஷிதா,அருண் பிரசாத், ஜாக்குலின், முத்து, பவித்ரா, சத்யா  மற்றும் சௌந்தர்யா ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பிக்பாஸில் ஆண்கள் அணியில் இருந்துதான் நாமினேஷன் இருந்த்து.

ஆனால் இந்த  வாரம் பெண்கள் அணியை சேர்ந்த ஒருவர்தான் பிக்பாஸில் இருந்து விலக போகிறார் என்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்கள் அணியை பொறுத்தவரை அவர்களுக்குள் ஒற்றுமை என்பதே இல்லை என கூறப்படுகிறது.

காத்திருக்கும் பெண் போட்டியாளர்கள்:

இதனால் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பெண் அணியினர் குறித்து வெறுப்புகள் இருந்து வருகிறது. தர்ஷா, பவித்ரா, சௌந்தர்யா மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. சௌந்தர்யாவிற்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர் வெளியேறும் வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான் என்றும் கூறப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam