பொதுவாகவே தமிழில் திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே அந்த படங்களை பிரமோஷன் செய்வதற்காக பல யுக்திகளை தயாரிப்பாளர்கள் பின்பற்றுவது உண்டு.
அந்த வகையில் நிறைய யூடியூப் பேட்டிகள் கொடுப்பதை தாண்டி மக்கள் மத்தியில் எளிதாக படத்தை பிரபலப்படுத்துவதற்கு சின்னத்திரை முக்கிய கருவியாக இருக்கிறது. அதனால் சின்ன திரையில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலமாக அவர்கள் தங்களது திரைப்படங்களை எளிதாக ப்ரமோஷன் செய்ய முடியும்.
ராணுவ வீரரை கேவலப்படுத்த வேண்டாம்
இப்படியாகத்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அதிகமாக திரைப்பட ப்ரமோஷன் நடப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் தற்சமயம் அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டில் சென்று இருக்கிறார்.
ஏனெனில் இப்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெறவில்லை. எனவே சிவகார்த்திகேயன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அதையும் தாண்டி சிவகார்த்திகேயன் விஜய் டிவிக்கு மிகவும் நெருக்கமான நபர் என்பதால் அவர் தற்சமயம் பிக்பாஸிலேயே ப்ரோமோஷன் செய்வதற்காக சென்று இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் சொன்ன அந்த வார்த்தை
அங்கு சென்று அமரன் திரைப்படத்தை குறித்து அவர் நிறைய விஷயங்களை பேசி வந்தார். அமரன் திரைப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற உண்மையான ராணுவ வீரனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
அதனால் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இதை கவனிச்சீங்களா?
இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து பிக் பாஸில் பேசிய சிவகார்த்திகேயன் கூறும் பொழுது அமரன் திரைப்படத்திற்கும் பிக்பாஸிற்கும் இடையே ஒற்றுமை இருக்கிறது என்று கூறுகிறார்.
இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது தொடர்ந்து போட்டிகள் பொறாமைகளைக் கொண்டு நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். அதை ஒரு இறந்த ராணுவ வீரரின் கதையோடு கம்பேர் செய்து பேசுவது எந்த வகையில் சரி என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் இது சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.