இதனால தான் அந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணேன்.. ஓப்பனாக பேசிய கண்ணானே கண்ணே சீரியல் நடிகை..!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடங்களை பிடிக்கக்கூடிய சீரியல்கள் அதிகளவு ஒளிபரப்பாகும்.

அந்த வகையில் கண்ணான கண்ணே சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மகளை வெறுக்கின்ற அப்பாவிடம் மகள் கொண்டிருக்கும் பாசத்தை பக்குவமாக எடுத்துச் சொன்ன சீரியல் தான் இந்த கண்ணான கண்ணே சீரியல்.

இதனால தான் அந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணேன்..

இந்த சீரியலில் கதாநாயகியாக பணிபுரிந்த நிமேஷிகா மீரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று மிகச் சிறப்பான முறையில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அப்பாவின் அரவணைப்புக்காக ஏங்கும் அப்பாவி பெண்ணாக ஒவ்வொரு சீனிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த சீரியலானது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டியும் தக்க வைத்த சீரியல்களில் ஒன்றாக இருந்தது. அத்தோடு இந்த சீரியலானது 722 வது எபிசோடில் முடிவுக்கு வந்தது. இதை அடுத்து புதிதாக சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புனிதா தொடரில் இவர் நடித்திருக்கிறார்.


இதனை அடுத்து அண்மை பேட்டியில் பேசி இருக்கும் கண்ணான கண்ணே சீரியல் நடிகை நிமேஷிகா தனக்கு நடந்த பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி பேட்டியில் ஓப்பனாக பேசி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் மட்டுமல்லாமல் இவரைப்போல சீரியல்களில் நடிக்கின்ற நடிகைகள் தங்கள் அழகை மேலும் மெருகேற்றிக் காட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இவர் எந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் அதுவும் எதற்காக செய்து கொண்டார் என்ற தகவலை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஓப்பனாக பேசிய கண்ணானே கண்ணே சீரியல் நடிகை..

கண்ணான கண்ணே சீரியல் நாயகி சீரியல்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே இவருக்கு ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனை இருந்துள்ளது. அதை எடுத்து இவரது மூக்கில் தசை வளர்ச்சியும் இருந்ததை அடுத்து எப்போதுமே ரன்னிங் நோஸ் இவருக்கு இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் இதை அப்படியே விட்டு விட்டால் இது ஆஸ்துமா வரை இவருக்கு பாதிப்பை கொண்டு சென்று ஆபத்தை ஏற்படுத்தும். எனவே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனையை வழங்கி இருக்கிறார்கள்.

அந்த ஆலோசனையை கேட்டதை அடுத்து தகுந்த மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றதோடு பிளாஸ்டிக் சர்ஜரி மூக்கில் செய்து கொண்டு மூக்கில் இருந்த அந்த தசையை நீக்கியதோடு மட்டுமல்லாமல் சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனைக்கு மருத்துவத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் அந்த சிகிச்சையை மேற்கொள்ள இவர் தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்ததாகவும் சில சமயங்களில் இவர் மூக்கின் வழியாக சளி ரத்தம் போல் வடிந்ததாகவும் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அத்தோடு அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த நிலை தற்போது மாறி உள்ளதால் தன்னை பார்ப்பவர்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட விஷயத்தைப் பற்றி தொடர்ந்து கேட்டிருக்கிறார்கள்.

அதற்கான விளக்கத்தை இந்த பேட்டியில் தெள்ளத் தெளிவாக கூறியதோடு மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியதற்கு இது தான் காரணம் என்ற உண்மையை ஓபன் ஆக கண்ணான கண்ணே சீரியல் நாயகி சொல்லி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அவர் முக மாற்றத்திற்கு காரணத்தை அறிந்து கொள்ள உதவியது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam