நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
முன்னதாக நடிகர் விஜயின் ரசிகர்கள் வெறும் சினிமா ரசிகர்கள் அவர்களால் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவையே ஒழுங்காக நடத்த முடியாது.. இதில்.. அரசியல் மாநாட்டை அதுவும் மாநிலம் தழுவிய மாநாட்டை நடத்துவது என்பது மிகவும் சிரமமான விஷயம் அனுபவம் இல்லாதவர்கள் விஜய் ரசிகர்கள் என்று சில அரசியல் கட்சிகளை சேர்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட புள்ளிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து கேலி செய்து வந்தனர்.
ஆனால், எந்த ஒரு பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறார்கள் தளபதியின் படையினர். அதிலும் தளபதி விஜயின் பேச்சு ரத்தின சுருக்கமாக உள்ளதை உள்ளபடி தன்னுடைய சித்தாந்தத்தையும் தன்னுடைய கொள்கை கோட்பாடு ஆகியவற்றையும் வளவளவென்று பேசாமல் ஒரே போடாக போட்டிருக்கிறார்.
மதவாத சக்தியான பாஜக.. திராவிடம் என்ற பெயரால் குடும்பமாக சேர்ந்து கொண்டு கொள்ளை அடிக்கும் திமுக.. இந்த இரண்டு கட்சிகளும் எனக்கு அரசியல் ரீதியான எதிரிகள்.
அதே நேரம் நம்மோடு நம்முடைய கொள்கைகளை ஏற்று பயணிக்க வரும் மாற்றுக்கட்சிகளை நாம் அரவணைத்து பயணிக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம்.
வந்தவர்களை அரவணைத்து செல்வது தான் எங்களுடைய பண்பு என்று கூட்டணிக்கான ஆச்சாரத்தையும் முதல் மாநாட்டிலேயே போட்டு இருக்கிறார் நடிகர் விஜய். பொதுவாக புதிய அரசியல் கட்சிகள் முதல் தேர்தலில் தனித்து களமாடுவது தான் வாடிக்கை.
ஆனால், நடிகர் விஜய் கட்சியின் வெற்றிக்கான வழியை தெளிவாக தேர்வு செய்திருக்கிறார். இங்கே தனியாக நிற்பது கூட்டணியுடன் நிற்பது என்ற எந்த ஒரு சிறிய வட்டத்திற்குள்ளும் சிக்கி விடாமல் வெற்றி ஒன்றையே நோக்கமாக கொண்டு பயணிக்கிறார் நடிகர் விஜய்.
மேலும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்கப்படும் என்பதையும் அறிவித்து இருக்கிறார். இது மிகப்பெரிய அதிர்வுகளை தமிழ்நாடு முழுக்க ஏற்படுத்தி இருக்கிறது.
மட்டுமல்லாமல் இது அரசியல் கட்சியின் இடையே மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி அருமையாக சிறப்பாக இந்த மாநாட்டை நடத்தி முடித்த தளபதி படையினருக்கு சக தளபதி ரசிகர்கள் மற்றும் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பொதுமக்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் தமிழாக்கம் டாட் காம் மற்றும் வாசகர்கள் சார்பாகவும் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக வெற்றி கழகத்திற்கு வாழ்த்துக்களை பதிவு செய்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.