விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தற்சமயம் சென்று கொண்டுள்ளது. கட்சியின் கொடியை விஜய் அறிவித்தது முதலே எப்போது கட்சியின் கொள்கைகளை விஜய் அறிவிப்பார் என்கிற கேள்வி இருந்து வந்த்து.
கொடி வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் வெகு சீக்கிரத்தில் கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடிக்கான அர்த்தம் இரண்டையும் அறிவிக்க போவதாக கூறியிருந்தார். இதற்காக ரசிகர்களுமே கூட காத்திருந்தனர்.
இந்த நிலையில் மாநாட்டில் தற்சமயம் கொள்கை பாடல் வெளியானது. அதில் பல விஷயங்கள் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் தற்சமயம் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வெளியான த.வெ.கவின் கொள்கைகள்
அதன்படி மதநம்பிக்கை உள்ளவர்கள் அற்றவர்கள் சமமாக பார்க்கப்படுவார்கள்.
இரு மொழி கொள்கை அடிப்படையில் ஆட்சி நடத்தப்படும். தமிழே ஆட்சி மொழியாக இருக்கும்.
த.வெ.கவின் கொள்கை சமூகநீதியின் அடிப்படையிலான கோட்பாடுகளாக இருக்கும்.
விகிதாச்சார அடிப்படையில் இடப்பங்கீடு முறை கொண்டு வரப்படும்.
பிற்போக்கு தனத்திற்கு எதிரானதாக த.வெ.கவின் கொள்கைகள் இருக்கும்.
போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதே த.வெ.கவின் முக்கிய கொள்கையாகும்.
அரசு துறையில் தனியாரின் இடையூறுகள் இருக்காது.
சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையில்லை. எனவே அந்த பதவியை நீக்க அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு சரவெடி போல பல திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.