தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் நடிகர் விஜயின் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
தன்னுடைய கொள்கை எதிரிகள் அரசியல் எதிரிகள் யார்..? என்பதை வெளிப்படையாக நடிகர் விஜய் மேடையிலேயே அறிவித்தார்.
பேசிய அவர் எப்போது நாம் சாதி மதம் அற்ற பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என கூறினோமோ அப்போதே நம்முடைய பொதுவான எதிரி யார் என்பதை அறிவித்துவிட்டோம்.
அதைப்பற்றி புதிதாக இங்கே புதிதாக அறிவிக்க தேவையில்லை. ஆனால், அவர்கள் மட்டும் நம்முடைய எதிரி கிடையாது. அவர்களை பாசிசவாதிகள் என்று கூறிக்கொண்டு தங்களை எதிர்க்க வரும் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கலரை பூசி விட்டு பாசிசம் பாசிசம் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டு திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்களும் நம்முடைய எதிரிகள் தான் என்று திமுகவை சாடியுள்ளார் விஜய்.
அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா..? என்று திராவிட கட்சிகளை கதற விட்டிருக்கிறார் நடிகர் விஜய்.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் எந்த அரசியல் கட்சி தலைவரின் பெயரையும் குறிப்பிட்டு நடிகர் விஜய் பேசவில்லை என்பதுதான்.
சித்தாந்தம் மற்றும் கொள்கை இவை இரண்டை மட்டுமே எதிர்த்து பேசியிருக்கிறார். எந்த ஒரு அரசியல் தலைவரின் பெயரையோ அவருடைய பதவியையோ குறிப்பிடாமல் தன்னுடைய சித்தாந்தம் மற்றும் கொள்கை குறித்த ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை நச்சென பேசியிருக்கிறார்.
இவருடைய இந்த நகர்வு ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. அரசியல் என்பது தனிப்பட்ட நபரை எதிர்ப்பது கிடையவே கிடையாத என்பதை நடிகர் விஜய் உணர்ந்திருக்கிறார்.
கொள்கையும் சித்தாந்தமும் மட்டுமே அரசியல் என்பதை அறிந்து வைத்திருக்கிறார் நடிகர் விஜய் என பலரும் நடிகர் விஜய்க்கு புகழாரங்கள் சூட்டி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜயின் இந்த சாட்டை சுழற்றிய பேச்சு இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.