தமிழ் திரைப்பட உலகில் ஒரு நடிகராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கும் நடிகர் தான் லிவிங்ஸ்டன். ஆரம்பகாலத்தில் இவர் தனது பெயரை ராஜன் என்று வைத்துக் கொண்டார். இதனை அடுத்து 1988-ல் பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்தார்.
இவர் நடிப்பில் வெளி வந்த சுந்தர புருஷன் திரைப்படம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றுக் கொடுத்ததோடு நல்ல வருமானத்தையும் பெற்று தர வழி செய்வது என்று சொல்லலாம்.
25 லட்சம் கொடுத்து உதவிய நடிகர்..
இவர் திரைக்கதை ஆசிரியராக 1985 ஆம் ஆண்டு கன்னி ராசி, காக்கிசட்டை போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார். இதை அடுத்து அடுத்த ஆண்டு 1986 அறுவடை நாள் படத்துக்கு திரைக்கதை எழுதிய கையோடு 1996-இல் சுந்தர புருஷன் படத்தில் கதாசிரியராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நடிக்கவும் செய்திருந்தார்.
மேலும் 1999-ஆம் ஆண்டு பூமகள் ஊர்வலம் என்ற திரைப்படத்தில் ஆவுடையப்பன் என்ற கேரக்டரை பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதில் சற்று சிரமம் ஏற்பட்டது.
எனவே வருமானத்தை இழந்த இவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த காலகட்டத்தில் இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.
அதுவும் அந்த நேரத்தில்..
அப்படி மருத்துவமனையில் அனுமதித்திருந்த தன் மனைவிக்கு மருத்துவ சிகிச்சை செய்ய சுமார் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் தேவைப்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் லிவிங்ஸ்டனுக்கு லால் சலாம் படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட லிவிங்ஸ்டன் தன் மனைவியை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என்று மனதளவில் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ரஜினிகாந்த்திடம் இருந்து இவருக்கு அழைப்பு வர இவர் ரஜினியிடம் பேசி இருக்கிறார்.
அந்த சமயத்தில் ரஜினிகாந்த் உங்கள் மனைவியின் மருத்துவ செலவிற்காக எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று கேட்க தன்மானத்தோடு அது பற்றி எதுவும் வேண்டாம் என்று கூற லிவிங்ஸ்டன்னிடம் ரஜினிகாந்த் நீங்கள் என்னை அண்ணனாக நினைத்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
கண் கலங்கிய லிவிங்க்ஸ்டன்..
இதனை அடுத்து நடிகர் லிவிங்ஸ்டன் சுமார் 25 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்ற விஷயத்தை சொன்னவுடன் அந்த பணத்தை செக்காக கொடுத்து லிவிங்ஸ்டனின் மனைவியின் மருத்துவ செலவிற்கு உதவியதாக அண்மை பேட்டி ஒன்றில் உருக்கமாக கூறியிருக்கிறார்.
இதை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் 25 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்தது நம் சூப்பர் ஸ்டார் ரஜினி அதுவும் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத சமயத்தில் லிவிங்ஸ்டன்னுக்கு உதவி செய்திருக்கக் கூடிய விஷயத்தை அவரை கண்கலங்க சொன்னதைப் பற்றி பலரோடும் பேசி வருகிறார்கள்.