விஜய்யின் Fitness க்கு இது தான் காரணம்..! நடிகர் ஷாம் ஓப்பன் டாக்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்த வயதிலும் இவ்வளவு பிட்னஸ் ஆக இருக்க காரணம் என்ன என்பது பற்றி நடிகர் ஷாம் ஓபன் ஆக கூடிய விஷயம் இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் ஷாம் தமிழ் திரைப்படங்களில் 2000-வது ஆண்டிலிருந்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இவர் 2000 ஆவது ஆண்டு குஷி படத்தில் சிவாவின் நண்பராக நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் ஏன் நீ ரொம்ப அழகா இருக்க என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

விஜய்யின் Fitness க்கு இது தான் காரணம்..

இதை அடுத்து அன்பே அன்பே, லேசா லேசா, இயற்கை, கிரிவலம், உள்ளம் கேட்குமே, தூண்டில், இன்பா, வீரா, ஆக்சன், கோடை விடுமுறை போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் அண்ணன் விஜய் இந்த வயதிலும் பிட்டாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் கூறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் வியந்து போனார்கள்.

அந்த வகையில் நடிகர் ஷாம் அண்ணன் விஜயிடம் காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்க காலையில் கொஞ்சம் போல் பொங்கல் சாப்பிட்டேன். அதுக்கப்புறம் ரெண்டு பூரி எடுத்துக்கொண்டேன் என்று சொல்லுவார், இதைத்தொடர்ந்து நான் மதியம் என்னன்னா சாப்பிட்டீங்க என்று கேட்டேன்.

நடிகர் ஷாம் ஓப்பன் டாக்..

அதற்கு அண்ணன் சப்பாத்தி கொஞ்சம் போல சிக்கன் அது மாதிரி கொஞ்சம் போல ரைஸ் என்று காணக்சிதமாக சொன்னதோடு அடுத்து ஈவினிங் என்ன சாப்பிட்டீங்க என்று கேட்டதற்கு சிறப்பான முறையில் பதில் அளித்தார்.

அந்த வகையில் மாலை நேரத்தில் மூடு நன்றாக இருந்தால் ரைஸ் சாப்பிடுவேன். இல்லையென்றால் சப்பாத்தி என்று சொன்னதை அடுத்து உடம்பை எவ்வளவு பிட்டாக வைத்துக்கொள்ள என்ன மாதிரியான எக்சர்சைஸ்கள் செய்வீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அப்படியெல்லாம் இல்லையடா நேரம் கிடைத்தால் கொஞ்சம் நேரம் வாக்கிங் செல்வேன் அவ்வளவுதான் என்று கூறினார். இதை ஏன் இங்கு நான் கூறுகிறேன் என்றால் ஒரு மனிதன் சரிவிகிதமான உணவினை தனக்கு ஏற்றபடி எடுத்துக் கொள்வதின் மூலம் உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் நார்மல் சாப்பாட்டை லிமிட் ஆகவும் ஹெல்தியாகவும் சாப்பிட்டு தான் தன்னுடைய உடம்பை இப்படி பிட்டாக மாற்றி இருக்கிறார் என்பதை நீங்களும் கேட்டு அதுபடி நடக்க முயற்சி செய்யலாமே.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam