இவரு என்ன பண்ணிட்டாருன்னு படம் எல்லாம் எடுக்குறீங்க.? இருங்க பாய்.. மொதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க..!

அமரன் திரைப்படமானது சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்து பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம் இந்த படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவரின் வாழ்க்கையை படமாக எடுத்திருக்கிறார்கள்.

அட இதை அடுத்து இவருக்கெல்லாம் படம் எடுப்பார்களா? இது தேவைதானா? என்று சிலர் யோசிக்காமல் பேசுவதை நிறுத்த வேண்டும் எதற்காக இவருக்கு இது மாதிரியான படத்தை எடுத்து நாட்டு பற்றை பலர் முன்னும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள் தெரியுமா?

இவரு என்ன பண்ணிட்டாருன்னு படம் எல்லாம் எடுக்குறீங்க.?

அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கட்டாயம் இந்த படத்தை பார்க்கும் போது தான் உங்களுக்கு மேஜர் முகுந்த் எப்படிப்பட்டவர் எதனால் அவரது பயோபிக் படத்தை எடுத்திருக்கிறார்கள் அது இருக்கும் எதார்த்தம் என்ன என்பது தெரியவரும்.

அந்த வகையில் சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த முகுந்த் எப்படியும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவர். இவர் தன்னுடைய 22 ஆவது வயதில் அதாவது 2006 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் வீரராக சேர்ந்துயிருக்கிறார்.

இதனை அடுத்து வீடு வாசல் உறவுகளை எண்ணாமல் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார். இந்த நிலையில் இவருக்கும் காதல் ஏற்படுகிறது.

அந்த வகையில் எட்டு ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து அவரையே திருமணம் செய்து கொள்கிறார். அந்த சமயத்தில் தன் மனைவியிடம் நாட்டுக்காக பணி புரிய கூடிய எனக்கு என்ன ஆனாலும் உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு அளவு கூடி கண்ணீர் வரக்கூடாது என்பதை அடிக்கடி சொல்லி வந்திருக்கிறார்.

இருங்க பாய்.. மொதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க..

இதை அடுத்து 2012 ஆம் ஆண்டு மேஜராக பதவி உயர்வை பெறுகிறார் மேஜர் முகுந்த். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்து விடுகிறார்.

உலகத்திலேயே மிக உனதமான செயல் என்னவென்றால் தாம் இறந்து விடுவோம் என்று தெரிந்தும் துணிந்து நாட்டுக்காக களத்தில் இறங்கி சண்டை போட்டு வீர மரணத்தை தழுவினார். இதனை அடுத்து இந்தியாவிலேயே உயரிய விருதாக கருதப்படக்கூடிய அசோக சக்கரா விருதினை 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் இவர் மனைவிக்கு கொடுத்து கவுரவ படுத்தியது.

இந்நிலையில் அமரன் என்ற பெயரில் இந்த திரைப்படம் அண்மையில் வெளி வந்து சாய்பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பலரையும் கவர்ந்துள்ளது. இப்போது உங்களுக்கு எதற்காக இவருக்கு திரைப்படம் எடுத்து கௌரவப்படுத்தினார் என்பது புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam