ஓமக்குச்சி நரசிம்மன் ஹாலிவுட் நடிகர் என்று தெரியுமா..? இதோ விபரம்..!

நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் ஒரு பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியவர். 

இவர் தமிழ் திரைப்படமான ஔவையார் திரைப்படத்தின் மூலம் 1953-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து சென்னையில் எல்ஐசி யில் பணிபுரிந்த படியே திருக்கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

ஓமக்குச்சி நரசிம்மன் ஹாலிவுட் நடிகர் என்று தெரியுமா..? 

இதனை அடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்ததோடு கவுண்டமணி செந்தில் போல நகைச்சுவையில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த அற்புத நகைச்சுவை நடிகர் என்று சொன்னால் மிகையாகாது. 

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரி ராஜா உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் இன்னும் அவர் பெயர் சொல்லக் கூடிய விதத்தில் உள்ளது. 

இவரைப் பார்த்தால் சினிமாவில் நடிக்கக்கூடிய வகையில் இவரது உடல் அமைப்போ, முக பாவமோ இல்லாத நிலையில் இந்த உருவத்தோடு எப்படி பலரையும் சிரிக்க வைத்தார் என்று ஆச்சரியத்தில் அனைவரும் மூழ்கி போவார்கள். எனவே சினிமாவிற்கு அழகை விட திறமை தான் முக்கியம் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இவரது நடிப்பு இருந்தது. 

இவரைப் பார்த்து பலரும் உருவ கேலி செய்த போதும் தன் விடா முயற்சியாலும் தனிப்பட்ட திறமையாலும் திரை உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இதோ விபரம்..

அட அப்படி இவர் எந்த ஆங்கில படத்தில் நடித்து ஹாலிவுட் நடிகராக மாறினார் என்று நீங்கள் கேட்கலாம். இவர் 14 மொழிகளில் 1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்றால் யோசித்துப் பாருங்கள். 

அந்த வரிசையில் இந்தியன் சம்மர்ஸ் என்ற ஆங்கில படத்தில் இவர் நடித்திருக்கிறார். இதனை அடுத்து கடைசியாக இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த தலைநகரம் படத்தில் நடித்த முடித்தார். 

மேலும் இரண்டு ஆண்டுகளாக வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 73 வது வயதில் 2009 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இந்நிலையில் இவர் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கின்ற விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை வியந்து பாராட்டி இருப்பதோடு இப்படிப்பட்ட நடிகரை இழந்து விட்டோமே என்றும் கவலை கொண்டு இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam