அவருக்காக 14 வருஷம் இதை பண்ணல.. ஓப்பனாக கூறிய நடிகை நிரோஷா..!

வாரிசு நடிகையான நடிகை நிரோஷா பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எம் ஆர் ராதாவின் மகளாகிய இவர் நடிகர் ராதிகா சரத்குமாரின் தங்கை என்று சொன்னால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவர் தமிழ் திரையுலகில் அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். 

இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த செந்தூரப்பூவே திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் இவரை ஃபேமஸான நடிகையாக மாற்றியது. இதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு தொடர்ந்து வந்து சேர்ந்தது.

அவருக்காக 14 வருஷம் இதை பண்ணல.. 

மேலும் நடிகை நிரோஷா சூரசம்ஹாரம், பட்டிக்காட்டு தம்பி, கைவீசம்மா கைவீசு, சொந்தக்காரன், பொறுத்தது போதும், பாண்டிய நாட்டு தங்கம், இணைந்த கைகள், பாரம்பரியம், சிலம்பாட்டம், அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். 

இவரும் அவரது அக்கா போல திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் ஒன்றில் இருந்து சீசன் நான்கு வரை தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். 

மேலும் இவர் தாமரை, சந்திரகுமாரி போன்ற தொடர்களில் நடித்ததை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வருவது சற்று குறைந்தது. இந்நிலையில் இணைந்த கைகள் படத்தில் நடித்த போது இவரோடு இணைந்து நடித்த ராம்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

தற்போது கணவன் மனைவியாகவும் நட்சத்திர தம்பதிகளாகவும் ஒருமித்து வாழ்ந்து வரும் இவர்கள் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அந்த வரிசையில் திருமணம் ஆகி தனது கணவனுக்காக 14 வருஷம் இதை செய்யவே இல்லை என்று கூறிய விஷயம் தற்போது பலரையும் ஆச்சிரியத்தில் தள்ளியுள்ளது.

ஓப்பனாக கூறிய நடிகை நிரோஷா..

இதற்கு காரணம் தன் பிறந்த வீட்டில் அதிக அளவு மாமிசத்தை உணவில் சேர்த்து வந்த நடிகை நிரோஷா தன் கணவர் அதிகளவு மாமிசம் சாப்பிடாதவர் என்பதால் கடந்த 14 ஆண்டுகளாக வீட்டில் சைவ உணவை மட்டுமே சமைத்து இருவரும் சாப்பிடுவதாக சொல்லி அனைவரையும் அதிர விட்டுவிட்டார். 

மேலும் இந்த விஷயத்தை ஓப்பனாக கூறியதை அடுத்து ரசிகர்கள் பலரும் இது தாண்டா காதல் என்று சொல்லி வருவதோடு மட்டுமல்லாமல் தன் கணவருக்காக சைவ சமையலுக்கு மாறிய நிரோஷாவின் காதல் பற்றி வெகுவாக புகழ்ந்து பேசி வருகிறார்கள். 

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பெருத்த கவனத்தைப் பெற்று இருப்பதோடு காதலிக்கும் தம்பதிகள் பலரும் இப்படி மாறுவதில் ஆச்சரியம் இல்லை இருந்தாலும் ஒரு நடிகை இந்த அளவுக்கு மாறி குடும்பஸ்திரியாக செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam