இந்தியாவில் எந்த நடிகருக்கும் இல்லாத.. இனிமேலும் கிடைக்காத தனிச்சிறப்பு கொண்ட நடிகர்..! எப்படி தெரியுமா..?

Did you know that Pooranam Vishwanathan holds a special place in Indian history?

பூரணம் விஸ்வநாதன் ஒரு நடிகராக இவரை நம்மில் பல பேருக்கு தெரியும்.

ஆனால் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக இவர் பணியாற்றியது எத்தனை பேருக்கு தெரியும்..?

யாருக்கும் கிடைக்காத காலமெல்லாம் நினைவிருக்கக்கூடிய தனிச்சிறப்பு இவருக்கு உண்டு.

pooranam vishwanathan

இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது அந்த மகிழ்ச்சியான செய்தியை ஆனந்த கண்ணீரோடு ஆல் இந்தியா ரேடியோ வானொலியின் மூலம் முதன் முதலில் நாட்டு மக்களுக்கு தெரிவித்தவர் பூரணம் விஸ்வநாதன் அவர்கள்.

ஒரு சிறந்த குணசித்திர நடிகராக மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததை முதன் முதலில் மக்களுக்கு தெரிவித்த பெருமைக்கு சொந்தக்காரராகவும் திகழ்ந்தார்.

pooranam vishwanathan

இவரின் செய்தி வாசிக்கும் உச்சரிப்பும் குரல் வளத்திற்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தனர்.

அதன் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தனது உணர்ச்சிகரமான நடிப்பாற்றல் மூலம் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர்.

இப்படி பல புகழுக்கு சொந்தக்காரரான பூர்ண விஸ்வநாதன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார்.

pooranam vishwanathan

கடைசியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பேருந்து நடத்துனரால் பாதிக்கப்பட்டு கதாநாயகன் விஜய்யின் உதவியோடு நீதிமன்றத்தில் இழப்பீடு பெரும் நபராக நடித்திருந்தார். இதுவே இவரது கடைசி திரைப்படம் ஆகும்.

Summary in English : Actor Pooranam Vishwanathan is not just known for his captivating performances but also for being the first person to announce India’s independence on All India Radio! Imagine the excitement and pride in his voice as he shared the news that would change the course of a nation forever.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam