மாநில விருது பெற்ற இயக்குனர் சடலமாக மீட்பு..! பிளாஸ்டிக் கவரில் சுற்றி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ..!

It’s a sad day for the Kannada film industry as we’ve just learned about the untimely passing of director Guruprasad.

பல்வேறு படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் குரு பிரசாத் அவருடைய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர் இறந்து இரண்டு நாட்கள் ஆகி இருக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு கன்னட திரைப்படங்களை இயக்கியுள்ள குரு பிரசாத் சில படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

சினிமா தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டிருக்கும் இவர் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இவருடைய வீட்டில் அழுகிய துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர்.

வீட்டின் உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்த காரணத்தினால் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது. அழுகிய நிலையில் அவர் சடலமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.

director guruprasad found dead

இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் அண்மைக்காலமாக சரியான வரவேற்பு வரவில்லை என தெரிகிறது. இதனால் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி அதனை சமாளிக்க முடியாமல் தவித்து வந்திருக்கிறார் இயக்குனர் குரு பிரசாத்.

இதன் காரணமாக இவர் இந்த மோசமான முடிவை எடுத்திருக்கலாம் என கூறுகிறார்கள். கன்னட திரைப்பட இயக்குனர் குரு பிரசாத் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான மாதா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இவருடைய எட்டேலு மஞ்சுநாதா என்ற திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கான கர்நாடகா அரசின் மாநில திரைப்பட விருதை வென்றது. சமீபத்தில் வெளியான ரங்கநாயக்கா என்ற திரைப்படம் வசூலில் பெரும் சரிவை சந்தித்தது.

director guruprasad found dead

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் எங்களிடம் வாங்கிய புத்தகங்களுக்கு இன்னும் பணம் செலுத்தாமல் இருக்கிறார் என்று புத்தகக் கடமை உரிமையாளர் ஒருவர் குருபிரசாத் மீது புகார் கொடுத்திருந்தார். இது எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது மோசமான முடிவை எடுத்திருக்கிறார். இந்நிலையில், இவருடைய வீட்டை உடைப்பதில் இருந்து அவர் சடலாமாக நீட்கப்பட்டு பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஆம்புலன்ஸில் ஏற்றும் வரை பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கின்றன. இது ரசிகர்களை பதைபதிக்க வைத்திருக்கிறது.

Summary in English : It’s a sad day for the Kannada film industry as we mourn the loss of director Guruprasad, who was found dead in his Bengaluru home. Known for his unique storytelling and impactful films, Guruprasad made a significant mark in regional cinema. His work resonated with many, blending humor and social commentary in a way that only he could.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam