இதனால் தான் மேஜர் முகுந்த் பிராமணர் என்பதை மறைத்தோம்.. ரகசியம் உடைத்த இயக்குனர்.. வெடித்த சர்ச்சை..!

In a recent interview, the director of the highly anticipated film “Amaran” unveiled intriguing insights regarding the character of Major Mukunth and his concealed Brahmin identity.

அமரன் திரைப்படத்தில் மேஜர் முகர்ந்து வரதராஜன் கதாபாத்திரத்தின் அடையாளத்தை வேண்டுமென்றே மறைத்திருக்கிறார்கள்.

அவர் ஒரு பிராமணர். இது அவருடைய வாழ்க்கை வரலாற்று திரைப்படம். அவர் ஒரு பிராமணர் என்று திரையில் காட்டுவதற்கு என்ன கேடு..? யாருக்காக பயப்படுகிறீர்கள்..? என்று பிரபல நடிகை மதுவந்தி சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் காட்டமாக பேசியிருந்தார்.

இது மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில், படத்தின் இயக்குனரே இது குறித்து தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, மேஜர் முகுந்த் வரதராஜன் பிராமணர் என்ற அடையாளத்தை மறைப்பதற்கு காரணம் அவருடைய மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் மற்றும் அவருடைய பெற்றோர்கள் கீதா மற்றும் வரதராஜன் ஆகியோர் தான்.

amaran movie

அவர்கள் என்னிடம் கூறிய விஷயம் என்னவென்றால்.. முகுந்த் தன்னை ஒரு இந்தியனாக தான் முதலில் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். அதற்கு அடுத்தபடியாக தமிழ் மீது அவருக்கு ஆர்வம் அதிகம். அவர் தன்னை ஒரு இந்தியராகவும் தமிழராகவும் அடையாளப்படுத்திக் கொள்வது தான் பெருமை கொண்டார்.

தன்னுடைய சான்றிதழ்கள் போன்றவற்றில் கூட எந்த மத அடையாளமும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என கூறினார். அவருடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து தான் முகுந்த் வரதராஜன் வரதராஜன் ஒரு பிராமணர் என்ற அடையாளத்தை காட்டாமல் மறைத்தோம்.

amaran movie

ஒரு திரைப்படத்தை வெளியிடுகிறோம். அதில் இருக்கக்கூடிய கதையையோ நடந்த சம்பவங்களையோ பற்றி உணராமல் இவர் என்ன ஜாதியை சேர்ந்தவர் என்று காட்டாமல் விட்டு விட்டார்கள் என பேசுவது வேதனையாக இருக்கிறது என தன்னுடைய வேதனையையும் பதிவு செய்து இருக்கிறார்.

மறுபக்கம் இதைத் தொடர்ந்து சர்ச்சையையும் வெடித்துள்ளது. திருமணத்திற்கு முன்பு முகுந்த் வரதராஜன் பெற்றோருடன் வசித்த இந்து ரெபேக்கா திருமணத்திற்கு பிறகு ஏன் அவர்களுடன் சேர்ந்து வசிக்கவில்லை..? இதற்கு என்ன காரணம்..? என்று படத்தில் தெளிவாக காட்டப்படவில்லை.

இது முழுக்க முழுக்க மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை நகர்வுகள் பற்றியது என்பதால் இந்து ரெபெக்கா ஏன் தனியாக வசிக்கிறார் என்பது தேவையில்லாத காட்சி புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் மேஜர் முகுந்து வரதராஜன் ஒரு பிராமணர் என்பதை மறைத்தால் தான் அவரை தமிழனாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்..! இந்தியனாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்..! என்பது என்ன வகையான மனநிலை..? அப்படி என்றால் பிராமணர்கள் தமிழ் சமூகத்திற்கும் சம்பந்தம் இல்லையா..? இந்த எண்ணம் எங்கிருந்து தோன்றுகிறது..?

amaran movie

இதனுடைய விதை எங்கிருந்து வருகிறது..? என்று தொடர்ந்தது குறித்து விவாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒரு வகையில் இந்த விவாதங்கள் படத்திற்கு பிரமோஷனாகவும் அமைந்துள்ளது என்பதை பார்க்க முடிகிறது. 

Summary in English : In a recent event, the director of the film “Amaran” unveiled intriguing details regarding the character of Major Mukund Varatharajan, portrayed in the movie. It has been disclosed that the decision to conceal Major Mukund’s Brahmin identity stemmed from a request made by his wife, Indhu Rebecca and his parents.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam