நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்..! உண்மையில் இவர் யார் தெரியுமா..?

பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய டெல்லி கணேஷ் நேற்று இரவு 11:30 மணிக்கு வயது முதிர்வு காரணமாகவும் உடல்நல குறைவு காரணமாகவும் காலமானார்.

இவருடைய உயிரிழப்பு அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் டெல்லி கணேசன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் திரை உலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் காலமாகி இருக்கிறார். 80 வயதாகும் அவர் சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு 11:30 மணி அளவில் உயிரிழந்திருக்கிறார்.

1944 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்ததில்லை கணேஷ் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார்.

delhi ganesh passed away

பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வருடம் வில்லன் வேடம் என ஏற்று நடத்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் டெல்லி கணேஷ்.

குணச்சித்திர வேடங்கள் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் தன்னை அடையாளம் காட்டி ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார். நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் தற்போது இருக்கும் இடம் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் டெல்லி கணேஷ் சேர்ந்து நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் முழு படங்களிலும் சில படங்களில் நடித்திருக்கும் இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் முக்கியமான கதாபாத்திரத்தின் எடுத்து ரசிகர்களை இழுத்திருக்கிறார்.

delhi ganesh passed away

சென்னை ராமாபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் இவருடைய அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. டெல்லி கணேஷ் மறைவுக்கு அவருடைய ரசிகர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

நடிகர் என்பதை தாண்டி நடிகர் டெல்லி கணேஷ் ஒரு விமானப்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் விமானப்படையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : The film industry is mourning the loss of a true legend, as actor Delhi Ganesh has passed away at the age of 80. His remarkable contributions to cinema have left an indelible mark on both audiences and fellow artists alike. Known for his versatile performances and compelling screen presence, Delhi Ganesh was not just an actor; he was a cultural icon who brought characters to life with authenticity and depth.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam