இப்படி ஒரு திருமணம் தேவையா..? பிரபல அரசியல் கட்சி தலைவர் பதில்..!

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் அவர்களுடைய திருமணம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள் இனிய பக்கங்களில் எழுதி இருக்கின்றன.

பணத்திற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழிப்பதா..? இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாத ஒரு மகனுக்கு ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்து வைப்பதா..? ஏழை என்றால் அவ்வளவு இளக்காரமா..? என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு பல்வேறு விமர்சனங்கள் இந்த திருமணம் சுற்றி இருக்கின்றன.

அதே சமயம் இந்த தம்பதியினர் நீடூழி வாழ வேண்டும் என்ற வாழ்த்துக்களையும் பலர் பதிவு செய்து வருகின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிபலிப்பாக பலரும் இந்த திருமணத்திற்கு வாழ்த்துக்களை பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.

ஆனால் சிலர் தங்களுடைய கேள்விகளையும் முன்வைக்கிறார்கள். அந்த கேள்விகள் நியாயமானதாக தான் தெரிகிறது என நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இது அபத்தமானது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க பாஜக சிறுபான்மையின் மாநில தலைவரான டெய்சி தங்கையா அவர்கள் தன்னுடைய வீடியோ ஒன்றில் இந்த திருமணம் தேவையா..? என்ற தலைப்பில் ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் பல்வேறு விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக நெப்போலியன் யார்..? நிஜமாகவே அவர் தன்னுடைய பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த பெண்ணை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்தாரா..? என்பதை பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.

நடிகர் நெப்போலியன் எவ்வளவோ உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக ஒரு மருத்துவமனையை ஆரம்பித்து அந்த மருத்துவமனையில் தன் மகனைப் போலவே யார் யாருக்கெல்லாம் இப்படியான தசைவு சிதைவு நோய் இருக்கிறதோ அவர்களுக்கு இலவசமாக வைத்தியம் பார்த்து வருகிறார்.

அவர்களுக்கு வீல் சேர் வழங்குவது.. அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் வழங்குவது.. என உதவி செய்து கொண்டிருக்கிறார். ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியான திமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒரு நபர் அதெல்லாம் எனக்கு தேவையில்லை என உதறி விட்டு தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவுக்கு சென்று அங்கு தங்கி தன்னுடைய மகனுக்கு தேவையான வைத்தியத்தை கொடுத்து அவருடைய உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நெப்போலியன் இந்த குணம் வேறு யாருக்கு வரும்..? என எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் ஒரு சாதாரண கவுன்சிலர் என்றாலே காலத்திற்கும் அவர் அரசியலை விட்டு விலக மாட்டார். வீட்டு வாசலுக்கு ஒரு செக்யூரிட்டி அவரை பார்ப்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.

ஆனால் ஒரு திமுக போன்ற ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து விட்டு பாராளுமன்ற உறுப்பினராக பதவிகளை வைத்துவிட்டு அரசியல் வேண்டாம் என்று தன்னுடைய மகனுக்காக நாடு விட்டு நாடு சென்று அங்கு ஒரு மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி.. இதெல்லாம் நெப்போலியன் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன.

அவர் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர் என்றால் அரசியலை விட்டு விலகி இருக்க மாட்டார். பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால் இலவசமாக மருத்துவமனை திறந்து அதற்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்.

மட்டுமில்லாமல் பல்வேறு திரை கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு லட்சக்கணக்கில் நன்கொடை கொடுத்திருக்கிறார். இப்படி எனக்கு தெரிந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார்.

நெப்போலியன் இப்படிப்பட்ட ஒருவருக்கு மருமகளாக செல்வது என்பது அந்த பெண்ணுக்கு கிடைத்த பெரும் பாக்கியம். இன்று உடல் நலம் முடியாத ஒருவரை கணவனாக திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று அங்கலாயித்துக் கொள்ளும் நபர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்..

இங்கே உடல் திடகாத்திரமாக இருந்து.. திருமணம் செய்து கொண்டவர்கள் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்களா..? உடல் அளவிலும் மனதளவிலும் சந்தோஷமாக இருக்கிறார்களா..?

திருமணம் என்பது உடலுறவு மட்டுமே கிடையாது. அதை தான் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனவே இந்த திருமணத்தை பற்றி தேவையில்லாத விஷயங்களை பேசி நெப்போலியன் அவர்களின் மனதை நோகடித்து அவருடைய கஷ்டத்தை வேடிக்கை பார்த்து அந்த பாவத்தை நாம் விலைக்கு வாங்க வேண்டாம் என மனமுருக பேசியிருக்கிறார் பாஜக சிறுபான்மை அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா அவர்கள் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.

Summary in English : Recently, BJP leader Daisy Thangaiah shared her thoughts on the much-discussed marriage of Napoleon’s son, and let’s just say she didn’t hold back! Her take was both refreshing and insightful, shedding light on how historical legacies can influence modern relationships. Thangaiah emphasized the importance of understanding one’s roots while navigating contemporary life choices.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam