சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம் ஒன்று நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
மருத்துவமனையில் ஊழியர்கள் செய்த பிழை காரணமாக இந்த அதிர்ச்சி அரங்கேறி இருக்கிறது. தன்னுடைய தோழி ஒருவரின் மகள் தன்னுடைய முக ஜாடையில் இருப்பதை அறிந்து சந்தேகப்பட்ட அந்த தாய் தன்னுடைய தோழியின் அனுமதியுடன் அந்த குழந்தைக்கு DNA டெஸ்ட் செய்து அந்த குழந்தையின் உண்மையான தாய் யார் என்று DNA ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.,
இந்த ரிப்போர்ட் அந்த தாயை மட்டும் இல்லாமல் நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. வியட்நாமில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. குழந்தை பிரசவித்த இரண்டு பெண்களும் தோழிகள். மருத்துவமனை ஊழியர்களின் அஜாக்கிரதை காரணமாக குழந்தைகள் மாறி மாறி ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.
நாட்கள் நகந்திருக்கின்றது. ஆனால் விதி இந்த இரண்டு குழந்தைகளையும் தோழிகளாக வளர்த்திருக்கிறது. தன்னுடைய மகளின் தோழி தன்னுடைய முக ஜாடையிலேயே இருப்பதை பார்த்து பலமுறை சந்தேகப்பட்டு இருக்கிறார் ஒரு தாய்.
ஒரு கட்டத்தில் பொறுத்து பொறுத்து பார்த்து அந்த குழந்தையின் தாயான தன்னுடைய நீண்ட நாள் தோழியிடம் தயங்கி தயங்கி இந்த விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்போது அந்த தோழியும் உன் குழந்தையை பார்க்கும் பொழுதும் அது என் குழந்தை போன்ற முக ஜாடையில் இருக்கிறது நான் எப்படி உன்னிடம் கேட்பது என தெரியாமல் இருந்தேன். நீயே கேட்டுவிட்டாய் என இருவரும் பரஸ்பரம் தங்களுடைய சந்தேகங்களை பூர்த்தி செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மருத்துவரிடம் ஆலோசனை செய்து பொது DNA டெஸ்ட் மூலம் இந்த குழந்தை யாருடையது என்பதை கண்டுபிடித்து விடலாம் என கூறியிருக்கின்றனர். தொடர்ந்து DNA டெஸ்ட் எடுத்து பார்த்தபோது இவருடைய சந்தேகம் உண்மையாக இருக்கிறது.
தன்னுடைய முக ஜாடையில் இருந்த தோழியின் குழந்தை வேறு யாரு குழந்தையும் அல்ல தன்னுடைய வயிற்றில் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தைதான் என்பதை இரு தோழிகளும் தெரிந்திருக்கின்றனர்.
தற்போது தங்களுடைய உண்மையான பெற்றோருடன் அந்த குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதே நேரம் கடந்த சில வருடங்களாக வளர்த்த குழந்தையை ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்ட விஷயம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இப்படியான பிரச்சனைகள் நடக்காமல் இருக்க மருத்துவமனைகள் கவனமாக செயல்பட வேண்டும்.. குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் கையில் Tag கட்டி விடுவது மிக முக்கியம்.
அந்த Tag-ல் குழந்தையின் பெற்றோர்.. பிறந்த நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு குழந்தை மருத்துவமனையை விட்டு டிஸ்டார்ஜ் செய்யும் வரை அதன் கையிலேயே இருப்பதை அந்த மருத்துவமனை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுத்து வருகின்றன.
Summary in English : In a twist that sounds like it’s straight out of a drama series, a Vietnamese father recently uncovered a shocking family secret. According to a report by the South China Morning Post, he started to notice something odd—his daughter didn’t look anything like him or his parents. At first, it was just a nagging feeling in the back of his mind, but as time went on, those suspicions grew stronger.