2001-ஆம் ஆண்டு வெளியான என்ன வழி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை சினேகா தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் நடித்தார் சினேகா அப்போது இருவருக்குள்ளும் காதல் உருவாக இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி குண்டாகி மாறிப்போன சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் நோக்கில் உடல் எடையை குறைத்து உள்ளார்.
மேலும் விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் சினேகா சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் அப்பா தனுஷ் கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் மஞ்சள் நிற சட்டை அணிந்து கொண்டு தொளதொள ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு அழகாக இருக்கும் தனது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாட்.. ஒரிஜினல் நாட்டுக்கட்டை.. என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்