80 கால கட்டங்களில் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை மாதவி கண்ணழகி என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த நடிகைக்கு நடந்த திருமணம் குறித்து அண்மை பேட்டியில் பயில்வான் பகிர்ந்த பல விஷயங்களை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
தெலுங்கு சினிமாவின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை மாதவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு கிடைத்த அற்புதமான நடிகை ஆவார்.
முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதை அடுத்து இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் டிக் டிக் டிக், ராஜபார்வை, தம்பிக்கு எந்த ஊரு, காக்கிச்சட்டை என்று பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
சாமியார் பேச்சில் மயங்கிய கண்ணழகி..
தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்ற பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த இவருக்கு அழகிய கண்கள் இருப்பதால் அந்த கண்ணழகியை பார்த்து ரசிகர்கள் ஏக்கத்தில் தவித்தார்கள்.
இவர் திரைப்படங்களில் பிஸியாக நடிக்கும் போதே 1996 ஆம் ஆண்டு தொழில் அதிபர் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு நியூ ஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாத இவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாகி விட்டார்.
இந்நிலையில் நடிகை மாதவி குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசும் போது கமல், ரஜினி என பல முன்னணி நடிகர்களோடு நடித்த நடிகை மாதவி ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
இதை அடுத்து இவர் ராம் என்பவரின் பக்தையாக மாறி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். இதை அறிந்து கொண்ட சாமியார் ராம தொழிலதிபர் ரால்ப் சர்மாவை அறிமுகம் செய்து வைத்து அவரை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியிருக்கிறார்.
திருமணப் பின்னணி குறித்து பிரபலம் சொன்ன உண்மை..
இதைத்தொடர்ந்து சாமியாரின் பேச்சை தட்ட முடியாமல் ரால்ப் சர்மாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி தற்போது மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருவதாக அண்மை பேட்டியில் கூறியது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அட சாமியார் பேச்சைக் கேட்டு ஒருவரின் வாழ்க்கை எந்த அளவு செழிப்பாக மாறி உள்ளதா? என்று அவர்களுக்குள் பேசி வருவதோடு இந்த விஷயத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
Summary in English: In a recent chat, Bayilvan Ranganathan opened up about the intriguing marriage secrets of actress Madhavi. Known for her charm and talent, Madhavi has always kept a bit of mystery around her personal life. Ranganathan shared some fun insights into how she navigated the ups and downs of relationships while maintaining her public persona. He emphasized that communication and mutual respect are key ingredients in any successful marriage.