1 கோடி ரூபாய் தூக்கி கொடுத்துட்டேன் .. மனைவி கிட்ட செம திட்டு Reveal பண்ணிய டான்ஸ் மாஸ்டர்..

கேரளாவில் அண்மையில் வய நாட்டில் நடந்த நிலச்சரிவிற்காக நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ் கொடுத்த விஷயமும் அதனால் அவர் மனைவியிடம் டோஸ் வாங்கிய தகவலும். 

தமிழ் திரை உலகில் டான்ஸ் மாஸ்டராக திகழ்ந்த பிரபுதேவாவுக்கு அடுத்ததாக தனது மாசான மாறுபட்ட நடனத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

திரை உலகில் படிப்படியாக வளர்ச்சி பெற்ற இவர் தற்போது பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கு என்று இடத்தை நிரந்தரமாக பிடித்திருக்கிறார். 

1 கோடி ரூபாய் தூக்கி கொடுத்துட்டேன் ..

தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய இவர் மாற்றுத்திறனாளி மனிதர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி இருப்பதோடு சிலரை அவரது திரைப்படத்தில் நடனம் ஆடவும் வைத்திருக்கிறார். 

அந்த வகையில் சிறந்த மனிதநேயம் மிக்க சமூக ஆர்வலராக இருக்கும் இவரிடம் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது மனைவியிடம் திட்டு வாங்கிய அனுபவம் உள்ளதா? என்று கேட்டார்கள். 

அதற்கு சற்றும் பயந்து கொள்ளாமல் சலிக்காமல் லாரன்ஸ் மாஸ்டர் பதில் அளித்திருக்கிறார். அந்த பதிலில் அண்மையில் வயநாட்டுப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை பார்வையிட்டதை அடைத்து ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை கேரள முதல்வரிடம் வழங்கியதாக கூறினார். 

மேலும் அப்படி கொடுக்கும் போது எந்த பணத்தை கொண்டு அங்கு வீடு இழந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டிக் கொண்டதோடு அதில் ஒரு வீட்டை மட்டும் தன் அம்மா திறந்து வைப்பார் என்று சொல்லியதாக சொன்னார். 

மனைவி கிட்ட செம திட்டு Reveal பண்ணிய டான்ஸ் மாஸ்டர்..

இந்த நிலையில் தான் தன் மனைவி நிவாரணம் என்ற 5 அல்லது 10 லட்சமோ கொடுத்து இருக்கலாம். அதை விடுத்து எப்படி 1 கோடியை அள்ளிக் கொடுப்பதா? என்று கேட்டாள்‌. அதற்கு நான் பதில் அளிக்கும் போது ஒரு கோடி நம்ம வீட்டில் இருந்திருந்தால் அது நகை வாங்கவோ சொத்து வாங்கவோ தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும். 

ஆனால் அது தற்போது பலரது வீடுகளாக மாற உள்ளது. எனவே இது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் புரிந்து கொள் என்று கூறியதாக சொன்னது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

இதை அடுத்து லாரன்ஸ் மாஸ்டர் இதற்கு தான் தன் மனைவியிடம் திட்டு வாங்கினாரா? என்று ரசிகர்கள் எந்த விஷயத்தை அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

Summary in English: In a recent interview, the multi-talented dance master and actor Raghava Lawrence opened up about a question that many fans have been curious about: his marital status. Known for his incredible dance moves and acting chops, Lawrence has always kept his personal life relatively private. But during this candid chat, he revealed that people often ask him why he hasn’t tied the knot yet.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam