தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்த கே எஸ் ரவிக்குமார் வீட்டில் நடந்திருக்கும் மரணம். அதுவும் அவர் தாயாரை இழந்ததை அடுத்து இறை உலகம் திரண்டு வந்து அஞ்சலி செலுத்துகிறது.
90 கால கட்டங்களில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் பின் நாளில் நடிகராக சில படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். அதே திரையுலகில் உச்சத்தை தொட்ட இயக்குனரின் ஒருவராக இவர் திகழ்கிறார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் பிளாக் பஸ்டர் மூவி ஆக அமைந்ததோடு மட்டுமல்லாமல் இவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர்கள் விருப்பம் கொண்டு இருந்தார்கள்.
பிரபல இயக்குனர் வீட்டில் மரணம்..
இந்நிலையில் நேற்று இரவு டிசம்பர் நான்காம் தேதி இரவு தனது தாயார் 88 வயது நிறைந்த ருக்மிணி அம்மாள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த விஷயத்தை தெரிவித்ததை அடுத்து திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது.
இதைத்தொடர்ந்து திரை உலகைச் சார்ந்த முக்கிய பிரபலங்கள் அனைவருமே கே எஸ் ரவிக்குமார் மற்றும் அவர் குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்து வருவதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவதாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் இன்று மதியம் 2:30 மணி அளவில் ருக்மணி அம்மாளின் முதல் நல்லடக்கம் செய்ய உள்ளது இவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை அடுத்து மன வேதனைகள் இருக்கும் கே எஸ் ரவிக்குமாருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.
அஞ்சலி செலுத்த திரண்ட திரையுலகம்..
தமிழகத்தின் சார்பில் நாமும் அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு ஈடு செய்ய முடியாத இழப்பால் வாடி தவிக்கும் அந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லலாம்.
மேலும் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் கே எஸ் ரவிக்குமாருக்கு ஆறுதல் தெரிவித்த கூடிய வகையில் பதிவுகளை தொடர்ந்து போட்டு வருகிறார்கள்.
Summary in English: It’s a sad day in the film industry as we mourn the loss of Rukmini Ammal, the beloved mother of director K.S. Ravikumar, who passed away at the age of 88. Known for her warmth and kindness, she was not just a mother to her family but also a guiding light for many in the cinema world.