சூர்யா 45.. வேண்டாம் என ஓடிய ஏ ஆர் ரகுமான்.. காரணம் அறிந்து ஷாக் ஆன ரசிகாஸ்!!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யாவின் 45 வது படத்தில் இருந்து ஏ ஆர் ரகுமான் விலகி இருப்பது குறித்து வெளி வந்திருக்கும் தகவல் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்துவரும் நடிகர் சூர்யா தற்போது சூர்யா 45 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்குவதாகவும் மேலும் படத்தை ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது. 

அதுமட்டுமல்லாமல் படத்திற்கான பூஜை சமீபத்தில் தொடங்கியதை அடுத்து இந்த படத்தில் திரிஷா, லப்பர் பந்து நாயகி சுவாசிகா, காளி வெங்கட், காஷ்மிரா ஆகியோர் நடித்த இருப்பதாக தகவல்கள் தெரியவந்தது. 

சூர்யா 45.. வேண்டாம் என ஓடிய ஏ ஆர் ரகுமான்..

படத்திற்கு மெருகு சேர்க்கக்கூடிய வகையில் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளதாக சொன்ன நிலையில் ஏ ஆர் ரகுமான், ஆர் ஜே பாலாஜி, சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்த படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்போடு இருந்தது. 

இந்நிலையில் இதற்கான அறிவிப்பு தற்போது வெளி வந்தது. எனினும் அந்த அறிவிப்பை பார்த்து ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து போய்விட்டார்கள். 

இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இனி நாம் பார்க்கலாம். அதற்கு முன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஜிகே விஷ்ணு கமிட் செய்யப்பட்டிருக்கிற இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது. 

ஆனால் படத்தின் இசையை பொருத்த வரை போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பெயர் இடம் பெறவில்லை. இதற்கு முன்பு வந்த அனைத்து போஸ்டர்களிலும் ஏ ஆர் ரகுமான் பெயர் இடம் பெற்று இருந்த நிலையில் இந்த போஸ்டரில் பெயரிடம் பெறாமல் இருந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

காரணம் அறிந்து ஷாக் ஆன ரசிகாஸ்..

இதை அடுத்து ஏ ஆர் ரகுமான் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக சொல்லப்படுகிறது இதற்கு காரணம் அண்மையில் தான் ஏ ஆர் ரகுமான் தன் மனைவி இடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிய போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சினிமாவிலிருந்து ஓராண்டு ஓய்வு எடுக்கப் போவதாக கூறியிருந்தார். 

அதனால் தான் தற்போது இந்த படத்தில் இருந்து விலகி இருப்பாரா? என்று ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதற்கு உரிய பதிலை ஏ ஆர் ரகுமான் தருவாரா? என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும். 

எனினும் சில ரசிகர்கள் பட குழுவோடு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு விட்டதா? என்ற கேள்வியை முன்வைத்து இருப்பதை அடுத்து இது குறித்து ஏ ஆர் ரகுமான் மற்றும் சூர்யா 45 படக்குழுவினர் விரைவில் விளக்கம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Summary in English: Big news in the movie world! It looks like the legendary A.R. Rahman is out from the much-anticipated Suriya 45 movie. Fans were super excited to see what magic he would bring to the soundtrack, but it seems like things didn’t pan out as expected. While we’re all bummed about this change, it opens up a whole new chapter for the film. Who knows? Maybe this means a fresh sound or a different vibe altogether!

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam