அடத்து.. மறுபடியும் கிளம்பிட்டாங்களா? ரஜினி வெர்சஸ் ப்ளூ சட்டை மாறன் கட்டப்பஞ்சாயத்து..

இன்று விமான நிலையம் வந்த ரஜினி இடம் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் பற்றி கேட்கப்பட்ட கேள்வியை அடுத்து அதற்கு அவர் தந்த பதிலை வைத்து ப்ளூ சட்டை மாறன் ரஜினியை பங்கம் செய்திருக்கும் விஷயம். 

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்திருந்தாலும் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது. 

மேலும் இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த ரஜினியின் முழு ஸ்டைலையும் அவர்கள் ஆசை தீர அனுபவிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இதனால் இந்த படத்தில் தான் சரியாக நடிக்கவில்லை என்று ஒரு விதமான அப்செட்டில் ரஜினிகாந்த் இருந்தார். 

அடத்து.. மறுபடியும் கிளம்பிட்டாங்களா?

அதனை தீர்க்கும் விதத்தில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வரக்கூடிய இவர் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து வைத்துவிடும் என்று நினைத்து வருவது நிஜமாக வேண்டும். 

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றதை அடுத்து இந்த படத்தின் மூலம் மீண்டும் தான் ஃபார்மில் இருக்கின்ற விஷயத்தை உறுதி செய்ய இந்த படம் லோகேஷுக்கு கை கொடுக்க வேண்டும். 

இந்த காரணத்தால் லோகேஷ் கனகராஜ் க்கும் ரசிகர்களின் மத்தியில் சற்று பிரஷர் அதிகமாக உள்ளது என்று சொல்லலாம். கூலி படத்தை முடித்த கையோடு மணிரத்தினத்தின் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளது. 

அதுபோல ஜெய்லர் இரண்டு படத்திலும் ரஜினி நடிக்க அதன் பிரமோ வீடியோ ஷூட் சில நாட்களுக்கு முன்பு நடந்ததாகவும் இந்த வீடியோ ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து இணையதள முழுவதும் இந்த வயதிலும் அவர் ஓயாமல் ஓடி ஆடி உழைத்துக் கொண்டு இருப்பது பலரது பார்வையிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ரஜினி வெர்சஸ் ப்ளூ சட்டை மாறன் கட்டப்பஞ்சாயத்து..

இதை அடுத்து சில சர்ச்சைகளில் ரஜினி சிக்கியதும் உங்கள் நினைவில் இருக்கலாம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது எடுத்தாலும் போராட்டம் என்றால் நாடு சுடுகாடாகிவிடும் என்று பேசிய பேச்சு பெரும் கண்டனத்தை பெற்றுத்தந்தது.

இதை அடுத்து தன் வாயால் சர்ச்சையை அடிக்கடி ரஜினிகாந்த் சம்பாதித்து வருகின்ற விஷயம் தற்போது மீண்டும் அரங்கேறி உள்ளது. இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்கள் திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவரோ எப்போ ஓ மை காட் சாரி என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றார். இதை பார்த்த ரசிகர்கள் ரஜினிக்கு எந்த விஷயம் கூடவா தெரியாது. ஒரு ஆறுதல் கூடவா சொல்ல மாட்டார் என்று வறுத்தெடுத்திருக்கிறார்கள். 

அதுமட்டுமல்லாமல் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எத்தனை பதிவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதியானவர்கள் பற்றி கேட்டதற்கு யார் அந்த ஏழு பேர் என்று கேட்டார். இப்போது திருவண்ணாமலையில் ஏழு பேர் பற்றி கேட்டதற்கு எப்போது நடந்தது என்கிறார். ஓ மை காட் என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

இதுபோல இன்னொரு ட்விட்டரில் தலீவரின் அதிரடி பஞ்ச்கள் நோ கமெண்ட்ஸ் தெரியாது எப்போ ஓ மை காட் என்று பதிவிட்டு இருக்கிறார் அவை ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

Summary in English: Rajinikanth is no stranger to controversy, and it seems like he’s found himself in the hot seat once again. Just the other day, he landed at Chennai airport and was met by a swarm of reporters eager to get his take on a tragic incident—the landslide in Tiruvannamalai that claimed seven lives. When asked about it, Rajini’s response was a mix of shock and sorrow: “When… Oh my God… I’m sorry.”

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam