இயக்குனர் வெற்றிமாறனோடு நடிகர் சிம்பு இணைந்து ஒரு படம் பண்ணுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது அது குறித்து இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஆட்டமே முடிஞ்சு போச்சு என்று நினைத்தவர்களின் மத்தியில் வந்துட்டேன்னு சொல்லு மீண்டும் வந்துட்டேன் என்று சொல்லு என தனது இரண்டாவது இன்னிங்ஸில் லிட்டில் சூப்பர் ஸ்டார் கலை கட்டி வருகிறார்.
இவரின் மாநாடு படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் இவருக்கு தொடர் வெற்றியைத் தந்து லிட்டில் சூப்பர் ஸ்டார் லிட்டில் சூப்பர் ஸ்டார் தான் என்பதை உறுதி செய்தது.
என்னடா சொல்றீங்க.. வெற்றிமாறனும் சிம்புவும் கூட்டணியா?
இதை அடுத்துதான் தற்போது அவர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாக்கி வரும் தக்கலை படத்தில் நடித்து வருகிறார். நட்ப்பதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்தார்.
இதனை அடுத்து ஆன்மீகத்தில் களம் இறங்கி இருக்கக்கூடிய இவர் தற்போது சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி வரும் வேளையில் யாரும் எதிர்பாராத ஸ்வீட் சர்ப்ரைஸ் வெளிவந்துள்ளது.
ஆடுகளம் போல களக்கட்டுமா?
இதில் இவர் மணிரத்தினம் இயக்கம் தக் லைஃப் படத்தை அடுத்து வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் இணையம் முழுவதும் வேகமாக கசிந்து வருகிறது.
இந்த படத்திற்கான கதையை வெற்றிமாறன் எழுத திரைக்கதை வசனம் அனைத்தையும் அவரே செய்ய படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே வடசென்னை படத்தில் நடிக்க வேண்டியது சிம்பு தான் ஆனால் கால் சீட் பிரச்சனையால் அந்த படத்தில் இருந்து வெளியேறிய இவர் மீண்டும் இந்த கூட்டணியில் இணைய இருப்பதால் கண்டிப்பாக இது ஒரு மாஸ் வெற்றியை எஸ்டிஆர் க்கு பெற்று தரும் என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
Summary in English: Simbu is all set to take on a fantastic role in Vetrimaaran’s upcoming story, and fans couldn’t be more excited! Known for his versatility and charisma, Simbu brings a unique flair to every character he portrays. This collaboration with the acclaimed director Vetrimaaran promises to be a match made in cinematic heaven.