Recently, director Magizh Thirumeni’s close circles got a sneak peek of his latest film, “VidaMuyarchi,” and the buzz is pretty interesting!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு உலகம் முழுதும் வெளியாகவுள்ளது.
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
நடிகர் அஜித் குமார் இந்த படத்திற்கான தன்னுடைய டப்பிங் போர்ஷனை முடித்துவிட்டார்.. கண்டிப்பாக இந்த திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடிக்கும் என்ற ஆவலில் இருக்கிறார் அஜித்குமார் ரசிகர்கள்.
இந்த சூழலில் இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படமான துணிவு திரைப்படம் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது.
இதனை தொடர்ந்து, லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகர் அஜித்குமார். கடந்த வருடம் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் தொடங்கியது.
ஆனால் படப்பிடிப்பில் ஏகப்பட்ட பிரச்சினையாகள்… படத்தில் பட்ஜெட் நீண்டு கொண்டே செல்கிறது.. மறுபக்கம் லைக்கா நிறுவனம் தயாரித்து வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து வருகிறது.. இதனால் நிதி நெருக்கடி காரணமாக படம் டிராப் செய்யப்பட்டது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி வந்தன.
ஆனால், படத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் மற்ற வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்றும் படத்தில் பணியாற்றியவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்குமார் நடிகர் ஆரவ் ஆகியோர் கார் ஓட்டும்போது ஏற்பட்ட விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் நடிகர்கள் அர்ஜுன், திரிஷா,, ரெஜினா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், ஹாலிவுட்டில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த பிரேக் டவுன் என்ற படத்தின் காப்பி தான் விடாமுயற்சி என்றும் இதற்காக 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.
இது ஒரு பக்கம் இருக்க படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடிந்து விட்ட நிலையில் படத்தை பார்த்த இயக்குனர் மகிழ் திருமேனிக்கு நெருங்கிய வட்டாரங்கள் படம் வேற லெவலில் இருப்பதாகவும்.. ப்ரேக் டவுன் படத்தின் கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தமில்லை.. இது டோட்டலாக வேறு கதை.. என்றும் விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார்கள் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழும்பி இருக்கின்றன.
Summary in English : Recently, director Magizh Thirumeni hosted a special screening of his latest film, VidaMuyarchi, for some close circles in the industry. The buzz around the movie has been palpable, especially with comparisons being drawn to his earlier work, Breakdown. However, those who attended the screening were quick to point out that there’s absolutely no relation between the two films.