Recently, Keerthy Suresh opened up about a troubling experience she had with a drunken guy who assaulted her in public.
ரொம்ப கல்லூரி முடிந்து நானும் என் தோழியும் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது ஒருவன் என் மீது சாய்ந்தான். குடிகாரன் அவன்.
இதனால் கோபம் அடைந்து அவனை பளார் என நான் அடித்து விட்டேன். அடித்து விட்டு அங்கிருந்து நானும் என் தோழியும் நடக்க ஆரம்பித்து விட்டோம்.
அடுத்த சில நிமிடங்கள் கழித்து என் பின்னால் ஏதோ பயங்கரமாக தாக்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் என்ன நினைத்தேன் என்றால் எனக்கு விபத்து ஏற்பட்டு விட்டது.
ஏதோ ஒரு வண்டி என் மீது மோதி விட்டது என்று நினைத்துக் கொண்டுதான் கீழே சரிந்தேன். கீழே விழுந்த அடுத்த சில வினாடிகளுக்கு என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.
கிறுகிறுவென ஆகிவிட்டது. காது கேட்கவில்லை. என்ன நடக்கிறது எனவே தெரியவில்லை. அடுத்த சில வினாடியில் கழித்து தான் எனக்கு சுயநினைவே வந்தது.
நினைவு வந்த பிறகு என்ன நடந்தது…? என பார்த்தால் நான் அடித்த அந்த நபர் என் மண்டையில் பயங்கரமாக அடித்து விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால், நான் விடவில்லை.
என்னுடைய தோழியும் நானும் அங்கிருந்து சிலரும் சேர்ந்து அவனை துரத்தி பிடித்து அருகிலேயே ஒரு போலீஸ் பூத் இருந்தது.
அதை போலீஸ் பூத்தில் அவனை ஒப்படைத்து புகார் கொடுத்து ஒரு நாள் அங்கேயே உட்கார வைத்து அதன் பிறகு தான் அனுப்பினோம் எனக் கூறியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Summary in English : Keerthy Suresh recently opened up about a pretty unsettling experience she had with a drunken guy who assaulted her in public. It’s definitely not something anyone should have to go through, especially someone as talented and beloved as she is.