“தலீவர் ஏன் கட்சி தொடங்கலன்னு தெரியுமா விஜய் அவர்களே..” ப்ளூ சட்டை மாறன் சொன்ன ஷாக் தகவல்..!

In a recent twist that’s got everyone talking, cinema critic and political analyst Blue Sattai Maaran has thrown some serious shade at actor Vijay regarding his involvement with the TVK party.

முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் புதிய தலைவருக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பரவலாக பேச்சு எழுந்தது.

அரசியல் தளத்தில் எங்கு திரும்பினாலும் இது தொடர்பான பேச்சுக்கள் அதிகம் இருந்த நிலையில் நடிகர் கமலஹாசன் புதிய கட்சி ஒன்றை தொடங்கி அரசியல் தலைவராக முயற்சித்தார்.

மறுபக்கம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி தன்னுடைய அடுத்த கட்டத்தை நோக்கி முயற்சி செய்தார். ஆனால், கடைசியாக அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று பின் வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

இது இவருடைய ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் மீது ஒரு வெறுப்பை உண்டு பண்ணியது என்று கூறலாம். இது நடிகர் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் விழுந்த ஒரு மிகப்பெரிய கரும்புள்ளி என்று கூறலாம்.

இது ஒரு பக்கம் இருக்க பிரபல நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஒன்றை தொடங்கி தன்னுடைய கட்சியின் முதல் மாநில அளவிலான மாநாட்டையும் நடத்தி முடித்து இருக்கிறார்.

2026 சட்டமன்ற பொது தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி தயாராகி வருகிறது.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகரும் அரசியல் நோக்கருமான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்களை வேட்டையாடிய விஜய் அவர்களே.. விரைவில் உங்கள் கட்சியை நோக்கி ஒரு ஸ்லீப்பர்செல் ஏஜென்ட் வர இருக்கிறார்.

அடுத்த வருடம் இன்னும் சில ஸ்லீப்பர் செல்கள் வருவார்கள். உங்கள் அரசியல் வியூகங்கள் அனைத்தும் அந்த ஸ்லீப்பர் செல் மூலம் பிரதான கட்சிகளுக்கு லீக் செய்யப்படும்.

உங்களுக்கு தவறான ஆலோசனைகளை சொல்லி உங்களை திசை திருப்பி உங்கள் கட்சியை சின்னாபின்னமாக எதிர்க்கட்சிகள் ஆடும் ஆடு புலி ஆட்டம் இது. படத்தில் வருவது போல நிஜத்திலும் அலர்ட்டாக இருங்கள்.

இவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அடித்து விரட்டினால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும். தலீவர் கடைசி நேரத்தில் கட்சியை கலைத்துவிட்டு ஓட்டம் பிடித்ததற்கு காரணம் என்ன என்று தெரியுமா..?

காலம் போன கடைசியில் தன்னுடைய கட்சியில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்துதான். ஒருவேளை அவர்களுடைய யோசனைப்படி அரசியல் களத்தில் புகுந்திருந்தால் தலீவர் இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் இழந்து இருப்பார்.

ஊரைக் கூட்டி அரசியல் கட்சி தொடங்குகிறேன் என கூறிவிட்டு கடைசி நேரத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் நான் அரசியல் தொடங்கவில்லை என்று பின்வாங்கி ஓடியதற்கு காரணம் ஸ்லீப்பர் செல்கள் தான்.

நடிகர் விஜய் கட்சியிலும் இப்படியான ஸ்லீப்பர் செல்கள் உள்ளே நுழைவார்கள். நடிகர் விஜயின் போக்கை மாற்றுவார்கள் என்று ப்ளூ சட்டை மாறன் பேசியிருப்பது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள்.. விஜயின் ரசிகர்கள்.. மட்டுமில்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும்.. அரசியல் நோக்கர்களையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

ஆண்டு ஆண்டு காலமாக ஆட்சி கட்டிலில் படுத்து பண பலம், படை பலம், அதிகார பலம் என ஏக போகமாக வாழ்ந்தவர்கள்.. அதற்கு ஆபத்து என்றால் அவ்வளவு எளிதில் விட மாட்டார்கள்.. இதனை விஜய் எப்படி சமாளிக்க போகிறார் என்ற விவாதம் இணைய பக்கங்களில் எழுந்துள்ளது.

Summary in English : In a recent turn of events, cinema critic and political analyst Blue Sattai Maaran has made some eye-opening comments aimed at actor Vijay regarding the potential threat of sleeper cells within his TVK party. It’s not every day you hear someone in the film industry mixing it up with politics, but Maaran is definitely not holding back.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam