Hey movie buffs! Exciting news for all you fans of Viduthalai 2 – the censor information is finally out, and it’s been certified as an A category by the CBFC (Central Board of Film Certification).
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி மஞ்சு வாரியர் இன்னும் பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுதும் டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன் கௌதம் மேனன் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
முதல் பாகத்தில் விஜய் சேதுபதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த பாதத்தில் நடக்கப்போவது என்ன..? வாத்தியாராக இருந்த விஜய் சேதுபதி ஏன் போராளியாக மாறி போர்க்களத்தில் புகுகிறார்…? என சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள இரண்டாம் பாதத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் விபரங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு “A” சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், ரன்னிங் டைம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் என தெரியவந்திருக்கிறது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம். பல இடங்களில் வசனங்கள் ம்யூட் செய்யப்பட்டு இருக்கிறது.
அதிலும் குறிப்பாக பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆயுதத்தை மக்களே அந்த போராட்டத்தை களத்தில் இருந்து உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வசனத்தை திருத்தி அந்த ஆயுதம் ஓட்டாகவும் இருக்கலாம் என்று மாற்றப்பட்டிருக்கிறது.
மட்டுமில்லாமல் பல கெட்ட வார்த்தைகள் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அவை அனைத்தும் ம்யூட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விவரங்கள் அனைத்தும் சென்சார் சான்றுகளில் வெளியாகி இருக்கிறது. அந்த சென்சார் சான்றிதழை கீழே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
Summary in English : Hey movie buffs! Exciting news for all you Viduthalai 2 fans out there – the censor information is finally in! According to the Central Board of Film Certification (CBFC), this much-anticipated sequel has been certified as an A Category film.