நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி, ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தா.ர் இதில் ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகை நயன்தாராவை தற்போது லைம் லைட்டுக்கு கொண்டு வந்தது என்னவென்றால் அது அவருடைய திருமணம் சம்பந்தப்பட்ட வீடியோ தான்.
தன்னுடைய திருமணத்தை படமாக்கி ஒரு திரைப்படமாக வெளியிட Netflix நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருந்தார் நடிகை நயன்தாரா. இதற்காக நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் மற்றும் இசையை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்டு அவர் அதனை மறுக்கவே நடிகை நயன்தாரா செய்த அட்டூழியங்கள் எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
சமீபத்தில் பாண்டிச்சேரியில் உள்ள பீச் ஹோட்டல் ஒன்றை விலைக்கு கேட்டிருந்தார் விக்னேஷ் சிவன் என்று கூறப்பட்டது. அதன் பிறகு, அதனை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் விக்னேஷ் சிவன் என்பது வேறு கதை.
ஆனால், ஒரு பீச்சில் உள்ள ஹோட்டலை விலைக்கு வாங்குவதற்கு காசு இருக்கிறது. அதே சமயம் ஒரு தயாரிப்பாளர் தன்னுடைய படைப்புக்கு உரிமை கூறும் போது அதனை காசு கொடுக்காமல் ஏமாற்றுகிறீர்கள் என்று நடிகை நயன்தாராவை விமர்சிக்க தொடங்கினார்கள் ரசிகர்கள்.
இது ஒரு பக்கம் இருக்க வலைப்பேச்சு என்ற youtube சேனலை நிர்வகித்துக் கொண்டிருக்கும் பிரபல பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டு பேசி நடிகை நயன்தாரா மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார்.
குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள் மீது அவருக்கு மாற்று கருத்து இருக்கிறது என்றால் அதனை கருத்தாக எதிர்கொள்வது தான் முறையாக இருக்கும். ஆனால், அவர்களுடைய தோற்றத்தை இழிவுபடுத்தும் விதமாக குரங்குகளுடன் ஒப்பிட்டு பேசியது பத்திரிகையாளர்களை தாண்டி பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி அவர்கள் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவனுக்கு பண வெறி, பணம் அவருடைய கண்ணை மறைத்து விட்டது.
நடிகை நயன்தாராவை பொருத்தவரை அவருடைய திறமைக்கும் அழகுக்கும் தாண்டி 100 மடங்கு அதிகமான சம்பளத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர்களுக்கும் எதற்காக நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கிறோம் என தெரியவில்லை.
வாங்கக்கூடிய நயன்தாராவுக்கும் எதற்காக நமக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்..? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களுக்கு ஹீரோயினாக போடுவதற்கு சரியான ஆள் கிடையாது.
இதன் காரணமாகத்தான் நயன்தாராவின் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதான் அவருடைய ஆட்டத்திற்கு காரணம் என்று விலாசி இருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Summary in English : Recently, there’s been quite a buzz around actress Nayanthara and her hefty paychecks. Valaipechu Bismi stirred the pot by claiming that she’s overpaid, and honestly, it’s sparked a lot of chatter in the industry. Producers are scratching their heads, wondering why they’re shelling out such huge salaries for her performances.