கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தில் சோபி கண்ணு சொக்கலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வேகா டமோட்டியா.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சரோஜா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால், பசங்க திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தது இவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனை, தொடர்ந்து வானம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
தமிழில் மூன்றே மூன்று திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஷ் என பல்வேறு மொழி படங்களில் விரல் விட்டு என்னும் அளவிலான படங்களிலேயே நடித்திருக்கிறார்.
நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் நடிகை வேகா.
இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தன்னுடைய பள்ளி பருவத்திலேயே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். மும்பையில் உள்ள நடிப்பு பள்ளியில் முறையாக நடிப்பை கற்றறிந்தவர் வேகா என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1985 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்த இவர் ஆஸ்திரேலியா சிட்னி மாகாணத்தில் தான் வளர்ந்தார். அங்கேயே தன்னுடைய பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பசங்க படத்தில் நடித்த சோபிக்கண்ணுவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
Summary in English : Vega Tamotia, the talented star from the hit movie “Pasanga,” has been making waves lately with her recent photos that have gone viral! Fans can’t get enough of her stunning looks and vibrant personality. Whether she’s rocking a casual outfit or dressing up for an event, Vega’s style always seems to catch the eye.