நடிகை அனுஷ்கா செட்டி சமீபத்தில் தன்னை பற்றி வரக்கூடிய விவகாரமான தகவல்கள் குறித்து தைரியமாக தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்.
பொதுவாக பிரபலங்களின் காதல் சம்பந்தப்பட்ட தலைப்புகளோ திருமணம் சம்பந்தப்பட்ட தலைப்புகளோ ரசிகர்களை ஆர்வத்தில் ஆழ்த்தும் இதன் காரணமாகவே அடிக்கடி முன்னணி நடிகைகளின் திருமணம் மற்றும் காதல் பற்றிய வதந்திகள் இணைய பக்கங்களில் வைரல் ஆவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அனுஷ்கா ஒரு படத்தின் பிரமோஷனுக்காக அல்லது ஒரு படத்தின் வேலைக்காக ஏதாவது ஒரு நடிகருடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் அந்த நிகழ்ச்சியில் அந்த நடிகரும் நானும் நட்பாக பழகி விட்டால் உடனே சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இருவருக்குள்ளும் சம்திங் சம்திங் இருக்கிறது என அவர்களாகவே யூகித்துக் கொள்கிறார்கள்.
சினிமாவில் மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் சமீப காலமாக இப்படியான செய்திகள் அதிகம் வலம் வருகின்றன. பில்லா படத்தில் நடிக்கும் போது பிரபாஸிற்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்ற தகவல் வெளியானது.
பாகுபலி படம் வெளியான போது இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்றே கூறினார்கள். அந்த நேரத்தில் நாங்கள் இருவருமே இது வதந்தியை நாம் மறுத்திருந்தோம்.
இன்னும் சொல்லப்போனால் பிரபாஸ் உடன் மட்டுமல்ல நடிகர்கள் சுமந்த், கோபிசந்த் இன்னும் சில நடிகர்களை நான் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன.
குறிப்பிட்ட நடிகர்களின் படத்தில் நான் நடிக்கும் பொழுது அந்த நடிகர்களை காதலிக்கிறேன் என்று வதந்திகள் வெளியாகின்றன. ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவில்லை.. ஒரு பெண் ஒரே நேரத்தில் எப்படி இத்தனை ஆண்களை காதலிக்க முடியும்..? எதற்காக இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள்..? என்று தெரியவில்லை என்று பொறுமை இழந்தவராக நடிகை அனுஷ்கா தன்னுடைய காட்டமான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.
Summary in English : Recently, actress Anushka Shetty took some time to address the swirling rumors about her personal life and upcoming projects. In a candid conversation, she shared her thoughts on the speculation that often surrounds her, emphasizing how it can be both amusing and frustrating.