வெளிமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் பலர் முக்கிய புள்ளிகளின் சீண்டலுக்கு உல்லாவதாக பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் பேசி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து நடிகைகளாக மாறியவர்கள் என்றால் வெகு சிலர்தான். ஆனால், வெளி மாநிலங்களில் இருந்து இங்கே நடிக்க வரும் நடிகைகளுக்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாகிறது.
கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக் கொண்டு போகிறார்கள். பெரும்பாலும் வெளி மாநில நடிகைகள் தான் அதிக அளவில் சாதனை படைக்கிறார்கள் .அதிலும் குறிப்பாக 80களின் இறுதியில் தொடங்கி தற்போது வரை தமிழ் திரை உலகில் அறிமுகமான வட இந்திய நடிகைகள் பல இன்றும் சிறந்த நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், அப்படி வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய நடிகைகளுக்கு இங்கு இருக்கக்கூடிய பெரும் புள்ளிகளாலும், தாதாக்களாலும், விஐபிகளாலும் அவ்வப்போது பல வகையான சீண்டல்கள் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டு வந்ததாக பிரபல சினிமா நகர் சபிதா ஜோசப் அவர்கள் சமீபத்திய தன்னுடைய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கலைமாமணி பட்டம் வென்றவர். மட்டுமில்லாமல் மூத்த பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கூறியதாவது வெளி மாநிலங்களில் இருந்து இங்கு நடிக்க வரும் நடிகைகளுக்கு முக்கிய புள்ளிகள் பலராலும் விஐபிகளாலும் சீண்டல்கள் கொடுக்கப்படுகிறது.
அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அப்போதைக்கு யார் சினிமாவில் பெரிய நடிகராக இருக்கிறாரோ அவர்களுடைய துணையை நடிகைகள் தேடிக் கொள்கிறார்கள். இதுதான் நடிகர்கள் நடிகைகள் காதலில் விழுவதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.
குறிப்பாக நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது நான் இயக்குனர் செல்வமணியின் ஆள் அவருடைய உறவினர் என்பதை அவரே அடையாளப்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
நடிகை குஷ்பூ தமிழில் வளர தொடங்கிய போது அவருக்கு ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள அப்போது மிகப்பெரிய நடிகராக இருந்த நடிகர் பிரபுவோடு தொடர்பு வைத்துக்கொள்ள முயற்சி செய்தார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் நடிகைகள் தங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள நடிகர்களின் உதவியை அவர்களுடைய நட்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஆனால், நடிகை நக்மாவை பொருத்தவரை அவர் எந்த நடிகருடனும் நெருக்கமாக இருந்ததில்லை. யாரிடமும் உதவியும் கேட்டதில்லை. நடிகர் சரத்குமார் உடன் இரண்டு திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் இருவருக்கும் இடையே கிசுகிசுக்கள் எழுந்ததே தவிர சரத்குமாரிடம் நட்பு கொள்ள அவர் பெரிதாக முயற்சிக்கவில்லை.
காதலன் திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகர் பிரபுதேவா மீது நக்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், பிரபுதேவா நக்மாவை விரும்பவில்லை. தன்னை காப்பாற்றிக்கொள்ள அந்த கட்டத்தில் பெரிய நடிகராக இருந்த பிரபுதேவா உடன் தன்னை நெருக்கமாக காட்டிக் கொள்ள முயற்சி செய்தார் நக்மா.
ஆனால், பிரபுதேவா நக்மாவை காதலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 50 வயதை தாண்டிவிட்ட நடிகை நக்மா ஜோதிகாவின் அக்கா என்பது குறிப்பிடதக்கது.
கடைசியாக சிட்டிசன் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காத இவர் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியல்வாதியாக பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.