நடிகை மியா கலிபா 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய முதல் சண்டை படத்தில் நடித்தார். சண்டைப்பட துறையில் நுழைந்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார்.
இந்த துறையில் இவர் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒருவராக அறியப்படுகிறார். பலதரப்பட்ட சண்டை வீடியோ தளங்கள் மியா கலிஃபாவின் பெயரை அதிகப்படியானோர் தேடுகிறார்கள் என்று தகவலை வெளியிட்டன.
கடந்த 2019ம் ஆண்டு Robert Sandberg என்பவரை திருமணம் செய்து கொண்ட மியா கலிஃபா சண்டை படங்களில் நடிக்க நடிப்பதில் இருந்து விலகி விட்டார். ஆனால், 2020ம் ஆண்டே தன்னுடைய கணவரை விவாகரத்தும் செய்தார். அதன் பிறகு உள்ளாடைகள், வாசனை திரவியங்கள், மின்சாதன பொருட்கள் போன்ற விளம்பரங்களுக்கு மாடலிங் அழகியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
மேலும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் தன்னுடைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் கிரிக்கெட் வர்ணணையாளராக மியா கலிஃபாவை பார்க்கலாம். இவருடைய இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்..? என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அவர் கூறியதாவது சண்டை படங்களில் நடித்தது என்னுடைய வாழ்க்கையை பொருளாதார நிலைமையை உயர்த்தியது. ஆனால், என்னுடைய மன ஆரோக்கியத்தை அது சிதைத்து விட்டது.
இதற்கு என்ன காரணம் என்று நான் ஆராய தொடங்கினேன். இதைப் பற்றி கூறுவதற்கு நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறேன். ஆனாலும், அதனை கூறி ஆக வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன்.
சண்டை படங்களில் நடித்ததால் நான் மிகவும் அவமானத்தால் மூழ்கி இருக்கிறேன். மியா என்று என்னை யாராவது அழைத்தால் அவர்கள் எந்த நோக்கத்தில் என்னை பார்க்கிறார்கள்..? நான் என்னை எப்படி பார்க்க கூடாது என்று நினைக்கிறேனோ.. அந்தக் கோணத்தில்.. நான் விரும்பாத விதத்தில்.. அவர்கள் என்னை பார்க்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறேன்.
சண்டை படங்களில் நடிக்கும் போது இருந்த மனநிலையை விடவும் சண்டை படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு எனக்கு இருந்த மனநிலை மிகுந்த மோசமானது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இந்த மனநிலையிலிருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் என்னுடைய மனநிலை மோசமான நிலையில் இருக்கிற காரணத்தினால் என்னால் எந்த விஷயத்திலும் சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை.
வாழ்க்கைக்கு தேவையான சரியான முடிவுகளை எடுக்க எனக்கு அதிக நேரம் பிடிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் என்னுடைய மனம் என் மீது கொண்டிருக்கும் எதிர்மறையான சிந்தனைதான். இது தான் என்னுடைய விவாகரத்துக்கு காரணம்.
அந்த சிந்தனையில் இருந்து வெளிவர நான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். சண்டை படங்களில் நடித்து எப்படி பிரபலமானேனோ அது போல மக்கள் எல்லோரும் பார்க்கக் கூடிய வகையில் மாடல் அழகியாகவும், விளையாட்டுப் போட்டி வர்ணனையாளராகவும் என்னுடைய மீதி நாட்களை நகர்த்த முயற்சித்து வருகிறேன் என பேசி இருக்கிறார் மியா கலிஃபா.
ஏற்கனவே பிரபல சண்டை பட நடிகை சன்னிலியோன் தன் மீது சண்டை பட நடிகை என்ற பிம்பத்தை மாற்ற திரைப்பட நடிகையாக தன்னை தகவமைத்து கொண்டார். அதே போல தற்போது மியா கலிஃபா மாடல் அழகியாகவும், விளையாட்டு போட்டு வர்ணனையாளராகவும் தன்னை தகவமைத்து கொள்ள முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.