பிரபல திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகர் விஜயின் பனையூர் தவெக அலுவலகத்தில் நடக்கும் கொடுமைகள் குறித்து சமீபத்திய மேடைப்பேச்சு ஒன்றில் பேசியிருக்கிறார். இது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
அவர் கூறியதாவது, நடிகர் விஜயின் பனையூர் அலுவலகத்திற்கு சென்ற உங்களுடைய நண்பர்கள் யாராவது இருந்தால் அவரிடம் கேட்டுப் பாருங்கள்.. நான் சொல்வது உண்மையா..? இல்லையா..? என்று புரியும்.
அவருடைய பனையூர் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என்றால்.. நீட் தேர்வு எழுத உள்ளே செல்லும் போது எப்படி எல்லாவற்றையும் பிடுங்கி விடுவார்களோ.. அதுபோல எல்லாவற்றையும் பிடுங்கி விடுவார்கள்.
பேனா எடுத்துச் செல்லக்கூடாது.. ஸ்மார்ட் வாட்ச் கட்டக் கூடாது.. அதிலும் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லவே இல்லை.. இவை அனைத்தையும் வெளியே கொடுத்து விட்டு அதன் பிறகு தான் அவருடைய அலுவலகத்திற்கு உள்ளேயே செல்ல முடியும்.
அந்த அளவுக்கு அவருடைய கட்சிக்காரர்களுக்கு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. அப்படி என்ன ஊரில் இல்லாத கட்சியை வைத்திருக்கிறார் விஜய் என்று சில கொச்சையான வார்த்தைகளை கூறி பகீர் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. எதனால் இப்படியான கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டு இருக்கிறது..? என்பதை தவெக தலைவர் விஜயோ அல்லது அவருடைய கட்சி பொறுப்பில் இருப்பவர்களோ சொன்னால்தான் புரிந்து கொள்ள முடியும்.
பாதுகாப்பு குறைபாடு என்று கூறினால்.. ஸ்மார்ட் வாட்ச்.. பேனா.. செல்போன் இதனால் என்ன பாதுகாப்பு குறைபாடு வந்துவிடப் போகிறது..? அதிலும் தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு இப்படியான கட்டுப்பாடுகள் என்றால் என்ன அர்த்தம்..? என்று கேள்வி எழுப்புகிறார்கள் இணையவாசிகள்.
Summary in English : In a surprising turn of events, the DMK spokesperson Shivaji Krishnamoorthy recently dropped some jaw-dropping news about the Actor Vijay‘s TVK Party. It seems that members of the TVK Party are facing some pretty strict rules when they enter their Panaiyur office. Can you believe it? They’re not allowed to bring in pens, smartwatches, or even mobile phones!