பிரபல டப்பிங் ஆர்டிஸ்டான ரவீனா ரவி கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகையாகவும் அறிமுகமானார். ஒரு கிடாயின் கருணை மனு என்ற திரைப்படத்தில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டினார்.
அதனை தொடர்ந்து, காவல்துறை உங்கள் நண்பன், ராக்கி, வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன், வட்டார வழக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதில் லவ் டுடே திரைப்படமும் மாமன்னன் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. லவ் டுடே திரைப்படத்தில் ஹீரோவின் அக்காவாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மாமன்னன் திரைப்படத்தின் வில்லன் பகத் பாசிலின் மனைவியாக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு இவரை நன்கு அறிமுகப்படுத்தியது என்று கூறலாம்.
தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த லக்கி பாஸ்கர் என்ற திரைப்படத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரிக்கு டப் செய்து இருந்தார்.
மேலும் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடி வசூல் செய்த ஜவான் திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில், வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா, லேக்கின்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு யோகா செய்யும் தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் மாமன்னன் படத்தில் நடித்த ரவீனாவா இது என்று வாயை பிளந்து இருக்கின்றனர்.
Summary in English : Raveena Ravi, the talented actress from the movie “Mamannan,” has been making waves on the internet lately—not just for her acting chops but also for her impressive yoga skills! Fans have been buzzing about her recent yoga poses that went viral, showcasing her flexibility and dedication to fitness.