சீரியல் நடிகை லாவண்யா சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்டார் அதில் அவரிடம் நீங்கள் எந்த வயதில் திருமணம் செய்து கொண்டீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்வி எழுப்பியதும் குபீரென சிரித்தார் நடிகை லாவண்யா. ஏங்க.. ஊருக்கே தெரியும்.. நான் வேறு புதிதாக சொல்ல வேண்டுமா..? என்று செல்லமாக சிரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் 43 வயதில் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறினார்.
இவ்வளவு தாமதமாக திருமணம் செய்து இருக்கிறீர்களே..? இது பற்றி உங்களுடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது..? என்று கேள்வி எழுப்பப்பட்டது இன்று வயதான பிறகும் திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது.
அதனால் எனக்கு எந்த கஷ்டமான உணர்வோ.. கூச்சமோ இல்லை. நீங்களே என்னை பார்க்கும் போது சொன்னீர்கள்.. நான் இன்னும் இளமையாக தான் தெரிகிறேன் என்று.
அப்படித்தான் நான் இருக்கிறேன். நான் இன்னும் இளமையாக தான் இருக்கிறேன். அதனால் எனக்கு 43 வயது திருமணம் செய்து கொள்கிறோமே என்ற எந்த மோசமான உணர்வும் இல்லை. மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என கூறியுள்ளார்.
ரசிகர்களும் நடிகை லாவண்யாவுக்கு திருமண வாழ்த்துக்களை பதிவு செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Summary in English : In a recent interview, serial actress Lavanya opened up about her journey to marriage at the age of 43, and her refreshing perspective on it is something we can all admire. She shared, “I had no worries about getting married later in life. In fact, I still feel young!”