“எனக்கு இங்கயே, இப்போவே வேணும்.. என்னால முடியல.. அடம் பிடித்த விஜய்..” நட்டி நடராஜன் செய்த வேலை..!

நடிகர் நட்டி நட்ராஜ் சமீபத்தில் நடிகர் விஜய் உடனான தன்னுடைய சுவாரசியமான அனுபவம் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறியப்பட்ட நாட்டி நடராஜ் சில திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

"எனக்கு இங்கயே, இப்போவே வேணும்.. என்னால முடியல.. அடம் பிடித்த விஜய்.." நட்டி நடராஜன் செய்த வேலை..!

சதுரங்க வேட்டை திரைப்படம் இவருக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து நிறைய படங்களில் வில்லன் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் உடனான அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், புலி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தொடர்ச்சியாக ஒரு 22 நாள் ஒரே இடத்தில் சூட்டிங் நடந்தது.

"எனக்கு இங்கயே, இப்போவே வேணும்.. என்னால முடியல.. அடம் பிடித்த விஜய்.." நட்டி நடராஜன் செய்த வேலை..!

சூட்டிங் ஸ்பாட்டை விட்டால் ரூமுக்கு செல்ல வேண்டும்.. ரூமில் இருந்து கிளம்பினால் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர வேண்டும்.. இப்படித்தான் இருந்தது. இதனால் வேறு எங்கும் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை.

ஒரு நாள் மாலையில் சீக்கிரமாகவே படப்பிடிப்பு முடிந்து விட்டது. வெளிச்சம் குறைவு மழை இருட்டிக் கொண்டு இருந்த காரணத்தினால் படப்பிடிப்பை மாலை 4 மணிக்கு எல்லாம் முடித்து விட்டார்கள்.

அதன்பிறகு தன்னுடைய அறைக்கு சென்று இருக்கிறார் விஜய். அங்கே அவரால் பொழுதை கழிக்க முடியவில்லை. உடனே நட்டியை கூப்பிடுங்கள் என்று என்னை அழைத்தார். நானும் போனேன்.. அவர் என்னிடம்.. எனக்கு இந்த நாலு சுவற்றுக்குள் இருக்க கஷ்டமா இருக்கு.. சென்னையில் படப்பிடிப்பு ருந்தால் எங்கேயாவது சிட்டி விட்டு வெளியே சென்று விட்டு வரலாம்.

இங்கே எங்கே செல்வது என்று தெரியவில்லை. என்ன பண்றது..? என்று என்னிடம் கேட்டார். உடனே ஒன்னும் பிரச்சனை இல்ல சார்.. நீங்கள் லுங்கி கட்டிக்கோங்க.. தலையில முண்டாசு கட்டிக்க்கோங்க.. அப்படியே வெளியே போயிட்டு வரலாம் என்று கூறினேன்.

"எனக்கு இங்கயே, இப்போவே வேணும்.. என்னால முடியல.. அடம் பிடித்த விஜய்.." நட்டி நடராஜன் செய்த வேலை..!

அவருடைய உதவியாளர்களிடம் யாரும் அவரை பின்தொடர்ந்து வர வேண்டாம் என்று கூறி விட்டேன். அவரும் லுங்கி கட்டிக்கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்.

நாங்கள் இருவரும் சாதாரணமாக ஹோட்டலை விட்டு வெளியே சென்று விட்டோம். வெளியே சென்று அப்படியே சிறிது நடந்த சென்றோம். சாலையோர டீக்கடை ஒன்றைப் பார்த்த விஜய் எனக்கு டீ வேண்டும் என்று கேட்டார்.

இங்க டீ குடிக்கிறீங்களா..? நான் ஹோட்டலுக்கு போய் குடிக்கலாம் சார்.. என்று கூறினேன். இல்லை இல்லை எனக்கு இங்கு தான் வேண்டும் என பிடித்தார். அங்கே டீ வாங்கி கொடுத்தேன்.

அதன்பிறகு சிறிது தூரம் நடந்து சென்றோம். அங்கு ஒரு ஆறு இருந்தது. இந்த ஆற்றில் குளிக்க வேண்டும் என்ற எனக்கு ஆசையாக இருக்கிறது எனக்கு கூறினார். எதுக்கு சார் வெயிட் பண்றீங்க.. வாங்க குளிக்கலாம் என்று சொல்லி இருவரும் அந்த ஆற்றில் குளித்து மகிழ்ந்தோம் என விஜய் உடனான தன்னுடைய சுவாரசியமான அனுபவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகர் நட்டி நடராஜன்.

Summary in English : Actor Natty, also known as Natraj, recently opened up about his wild shooting experience alongside the legendary Actor Vijay during the filming of the movie “Puli.” Picture this: a vibrant set filled with colorful costumes, elaborate props, and a buzz of excitement in the air. Natty couldn’t help but share how surreal it felt to be working with someone he admired for so long.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam